''புத்தரின் புனித வாக்கு'' என்கின்ற இந்த நூலை பழைய ஆவணங்களிலிருந்து ''பால் காரஸ்'' என்பவர் தொகுத்துள்ளார். ஜப்பானிலுள்ள கமகூரா புத்த மடத்தின் புத்த பிட்சு 'ரெட் ரெவரன்ட் ஷாக்கு சோய'னால் இது 1894ல் வெளியிடப்பட்டது. இன் நூலில் விளக்கப் படங்களை 'ஒ.கோபெட்ஸ்கி' என்பவர் வரைந்துள்ளார். கிறித்தவர்களுக்கு ''பைபிள்'' போலவும், இஸ்லாமியர்களுக்கு ''குரான்'' போலவும் சீக்கியர்களுக்கு ''கிரந்தம்'' போலவும் இன் நூல் புத்த மத்த்திற்கு புனித நூலாக்க் கருதப்படுகிறது. பல நாடுகளில் அனைத்து பிரிவு புத்த ஆலயங்களிலும் இன் நூல் வைக்கப்பட்டு புனித நூலாக கருதப்படுகின்றது. ஜப்பான் மற்றும் இலங்கையில் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. இன்நூல் பைபிள்,குரானை போலவே அத்தியாயம்.சுலோகம் என்ற முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை உள்ளடக்கியது இன் நூல். தமிழில் மு.கி. சந்தானம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இந்தியாவில் இந் நூலை இந்திய அரசு ''தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்'' மூலம் பல மொழிகளில் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு -2000, விலை ரூ.75.00, தமிழ் நாட்டில் கிடைக்குமிடம் - ப்ப்ளிகேஷன்ஸ் டிவிஷன், இராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை-600090.(8வது அத்தியாயத்திலிருந்து புத்தரை மொட்டைத் தலையராக அறிமுகப்படுத்துகின்றனர், ஆனால் படம் வரைந்தவரோ புத்தரை ''கிராப்பு'' தலையராகவே வரைந்துள்ளார். அதோடு புத்தரை ''இயேசு''வின் சாயலாகவே வரைந்துள்ளார் ) புத்தரை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள இந்நூலை வாங்கி படியுங்கள். அரசு வெளியீடாக இருப்பதால் விலையும் குறைவு தான்.
- 18.07.14, முகநூல் பக்கத்தில்