Saturday, 13 July 2019

50 வருடம் ஹிந்தி தெரியாமல் திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கியதா தமிழ்நாடு?

உயர் கல்வி :


பள்ளிக்கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம் - அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..


தமிழ் நாடு - 38.2%..


பிஜேபி, காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 17.6% ;


மபி - 17.4% ;


உபி - 16.8% ;


ராஜஸ்தான் - 18.0% ;


இந்திய சராசரி : 20.4%


 


கல்வி நிலையங்களின் தரம்:


2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD 
துறை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,


முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்..


இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை...


 


முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில்,


தமிழ் நாடு - 22 ;


குஜராத் - 5 ;


மபி - 3 ;


உபி - 6 ;


பிகார் - 1 ;


ராஜஸ்தான் - 3


 


முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில்


தமிழ் நாடு - 24 ;


குஜராத் - 2 ;


மபி - 0 ;


உபி - 7 ;


பிகார் - 0 ;


ராஜஸ்தான் - 4


 


பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-


இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரா ஆகிய


3 மாநிலங்கள் அளிக்கிறன.


மகாராட்டிரா மாநிலத்தை அடுத்து இப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.


தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place) ;


பிஜேபி, காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 10.94 lakh crore (5th) ;


மபி - 7.35 lakh crore (10th) ;


உபி - 12.37 lakh crore (4th) ;


ராஜஸ்தான் - 7.67 lakh crore (7th) ;


சத்தீஸ்கர் - 2.77lakh crore (17th)


Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :-


தமிழ் நாடு - 21 ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 36 ;


மபி - 54 ;


உபி - 50 ;


ராஜஸ்தான் - 47 ;


சத்தீஸ்கர் - 46 ;


இந்திய சராசரி : 40


 


Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-


தமிழ் நாடு - 79 ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 112 ;


மபி - 221 ;


உபி - 285 ;


ராஜஸ்தான் - 244 ;


சத்தீஸ்கர் - 221 ;


இந்திய சராசரி : 167


 


தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்(vaccination coverage) :-


தமிழ் நாடு - 86.7% ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 55.2% ;


மபி - 48.9% ;


உபி - 29.9% ;


ராஜஸ்தான் - 31.9% ;


சத்தீஸ்கர் - 54% ;


இந்திய சராசரி : 51.2%


 


கல்வி விகிதாசாரம்(Literacy Rate) :-


தமிழ் நாடு - 80.33% ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 79% ;


மபி - 70% ;


உபி - 69% ;


ராஜஸ்தான் - 67% ;


சத்தீஸ்கர் - 71% ;


இந்திய சராசரி : 74%


 


ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-


தமிழ் நாடு - 943 ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 890 ;


மபி - 918 ;


உபி - 902 ;


ராஜஸ்தான் - 888 ;


இந்திய சராசரி : 919


 


தனி நபர் வருமானம்(Per Capita Income - ரூபாயில்)


தமிழ் நாடு - 1,28,366 ;


பிஜேபி, காங்கிரஸ்ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 1,06,831;


மபி - 59,770 ;


உபி - 40,373 ;


ராஜஸ்தான் - 65,974 ;


சத்தீஸ்கர் - 64,442 ;


இந்திய சராசரி : 93,293


 


மனித வள குறியீடு (Human Development Index)


தமிழ் நாடு - 0.6663 ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 0.6164 ;


மபி - 0.5567 ;


உபி - 0.5415 ;


ராஜஸ்தான் - 0.5768 ;


சத்தீஸ்கர் - 0.358 ;


இந்திய சராசரி : 0.6087


 


ஏழ்மை சதவீதம்(Poverty (% of people below poverty line))


தமிழ் நாடு - 11.28% ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 16.63% ;


மபி - 31.65% ;


உபி - 29.43% ;


ராஜஸ்தான் - 14.71% ;


சத்தீஸ்கர் - 39.93% ;


இந்திய சராசரி : 21.92%


 


ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்(Malnutrition)


தமிழ் நாடு - 18% ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 33.5% ;


மபி - 40% ;


உபி - 45% ;


ராஜஸ்தான் - 32% ;


சத்தீஸ்கர் - 35% ;


இந்திய சராசரி : 28%


 


மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)


தமிழ் நாடு - 149 ;


பிஜேபி,காங்கிரஸ் ஆளும் வட மாநிலங்கள்


குஜராத் - 87 ;


மபி - 41 ;


உபி - 31;


ராஜஸ்தான் - 48 ;


சத்தீஸ்கர் - 23 ;


இந்திய சராசரி : 36


 


இப்படி எந்த ஒரு அளவீடை எடுத் துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது -. இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..


மேலும்,


1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.


2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.


3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.


4. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகம்..


5. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..


உண்மைநிலவரம் இப்படியிருக்க, இந்தி படிக்காததால் திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய்க் கூசாமல் சொல்லிக் கொண்டு இருகிறார்கள். தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்.


எச்சரிக்கை!


-  விடுதலை ஞாயிறு மலர், 15.7.19

நாங்களும் ‘பிராமின்’ நீயும் ‘பிராமின்’ ஆதலால்....?

மின்சாரம்


இந்தியாவின் இமய மலைச்சாரலில் உள்ள காஷ்மீர் மாநிலம் கதுவாவில்  ஆசிபா என்ற 7  வயது சிறுமி கொடூரமான முறையில் பாலி யல் வன் கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு  பாந் தன்கோட் சிறப்பு நீதிமன் றத்தில் வழங்கப்பட் டது.

இந்தக் கொடூரமான கொலை நாடு முழு வதும் கடும் போராட்டத் தைத் தூண்டியது. இந்த வழக்கில் 8 பேர் சிக்கியுள்ளனர்.  குற்றம் தொடர்புடைய ஒரு சிறுவன்மீதான குற்றச் சாட்டு உறுதிசெய்யப்படாத தால் அவரை மட்டும் விடுவித்த நீதி மன்றம் மற்ற அனை வருக்கும் சிறைத் தண்டனை வழங்கியது

பஞ்சாப் - பதான் நீதிமன்றத்தில்...

இந்தியாவையே பரபரப்பிற்கு ஆளாக்கிய ஆசிபா  பாலியல் வன் கொடுமை  செய்து கொல்லப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான் கோட் நீதிமன்றத்தில்   ஜூன் 3 ஆம் தேதியோடு விசாரணை முடிந்தது.  மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தேஜ்வந்தர் சிங் 10.6.2019 அன்று தீர்ப் பளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கு அதிகளவு போராட் டத்தைத் தூண்டியது என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகையில், இஸ்லாமிய நாடோடி இன சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கதுவா மாவட் டத்தில் கடத்தப் பட்டு கோயிலுக்குள் 4 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு  கொல்லப்பட்டார். சிறுமியின் தலை பாறையின் மீது கிடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் காட்டிற்குள் கிடந்தது என ஜூன் 17 அன்று  கண்டுபிடிக்கப்பட்டது.  மூன்று நாள் கள் கழித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று பெருமையுடன் கூறிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அதன் பிறகு  கத்துவாவில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கோவில் பூசாரி, அவரது மகன், உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர், இரண்டு காவல் அதி காரிகள் உள்ளிட்ட பலரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது.



குற்றவாளியாக


கோவில் அர்ச்சகர்


இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக் கியது. இதனால் இந்த வழக்கு குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட் டது. துணை ஆய்வாளர் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் இருவரும் ஆதாரங்களை அழிக்க முற்பட்ட குற்றத்திற் காக கைது செய்யப்பட் டனர்.  முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியும் கோவில் அர்ச்சகருமான சஞ்சி ராம்  20.3.2018 அன்று சரணடைந்தார்.

சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் தத்தா, சிறப்பு காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா  ஆகியோர் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியை கொலை செய்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சான்றுகளை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. அமைச்சர்கள் ஆதரவு


குற்றவியல் பிரிவின் விசாரணைப்படி  கதுவா நகரில் இருந்து இஸ்லாமியர்களை விரட்டி அடிக்கவும்  பயத்தினை உருவாக்கவும் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வும் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை, வனவிலங்கு சிறுமியை கடித்து குதறியுள்ளது, ஆனால் முதல்வர் மகபூபா முப்தி இந்துக்கள் மீது விரோதமாக இருக்கிறார் ஆகவே பொய்யான குற்றச்சாட்டை இந்துக்கள் மீது வைக்கிறார் என்று கூறி போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில்  காஷ்மீர் பாஜக அமைச்சர்கள்  சவுத்ரி லால் சிங் மற்றும் பிரகாஷ் கங்கா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கதுவா நீதிமன்றத்தில் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது நீதிமன்றத்தில் பாஜக வழக்குரைஞர் அணி பெரும் வன்முறையில் ஈடுபட்டு அதை தடுக்க முற்பட்டனர். இதனால்  உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை ஜம்மு-காஷ்மீரில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் வழக்குரைஞர் கள் ஜே.கே. சோப்ரா, எஸ்.எஸ் பாஸ்ரா மற் றும் ஹர்மீந்தர் சிங் ஆகியோரை உள்ளடக் கியது.  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குர்தாஸ்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

வழக்குரைஞர் அச்சம்!


கடந்த ஆண்டு கதுவா சிறுமியின் குடும் பத்தினரின் வழக்குரைஞர் தீபிகா ராஜ்வத் வழக்கு குறித்து வாதாடுவதில் இருந்து பின் வாங்கினார். தனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறைக்கு எழுத்துமூலம் புகார் கொடுத்தும் காவல்துறை அலட்சியம் செய்ததால் இவ் வழக்கில் இருந்து வெளியேறுவதாகக் கூறி யிருந்தார்.

உலகை உலுக்கிய இந்தக் கொடூரத்தின் பின்னணியில் நியாய தர்மம், தார்மிகம் பேசும் பார்ப்பனர்களாக ‘இந்து’த்துவாவாதி கள் இருக்கிறார்கள். இவ்வளவுக் கேவலமான ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை இந்துத் தீவிரவாதிகள், வெறியர்கள் என்று சொன்னால் வெறிபிடித்த வேட்டை மிருகங் களாக விழுந்து பிடுங்குகிறார்கள் - குதறு கிறார்கள்.

இதில் மிக முக்கியமான - ஏன் அதி முக் கியமான தகவல் ஒன்று இருக்கிறது. பார்ப்ப னர்களைப் பற்றிக் கூறினால், இந்தத் தி.க. காரர்களுக்கு இதுதான் வேலை; சதா பார்ப்பனர்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்று கதைக்கும் மனிதர்களை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கி றோம்.

இதோ ஒரு தகவல்; படித்தபின் ஆற அமர யோசியுங்கள் - யோசியுங்கள். அதற்குப்பின் தி.க.காரர்கள் யாரையேனும் பார்க்க நேர்ந் தால் உங்கள் கருத்தை மனந்திறந்து சொல்லுங் கள்! சொல்லுங்கள்!

இதோ அந்தத் தகவல்:

பெண் காவல்துறை அதிகாரியின் பேட்டி இதோ:

குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராம ணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர் களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத் தார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ‘ எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்’ என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாத தால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதர வாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.

கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங் கரமாக முழக்கமிட்டார்கள். மூவர்ணக் கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத் தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். பிணை மனுக்கள் விசார ணைக்கு வரும்போதெல்லாம் வழக்குரை ஞர்கள் கும்பலாக முழக்கமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளி யேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந் திருக்கும். சில காவல்துறையினரும் குற்ற வாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒரு விதமான சட்டமற்ற தன்மையையும் பீதி யையும் நிறைத்து வைத்திருந்தார்கள்.  ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம். . நீதித்துறையின் மீது எங்க ளுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... “

- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. சுவேதாம்பரி சர்மா அவர்களின் பேட்டிதான் இது.

இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? பார்ப்பனர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் பச்சைப் பார்ப்பனராகவே கொஞ்சமும் கூச்ச மின்றி நடந்து கொள்கிறார்கள்  என்பதுதான் கவனிக்கத்தக்கது. பார்ப்பனராக இருந்தாலும் இதுபோன்ற பெண் அதிகாரிகளைக் காண் பது அரிதினும் அரிதே!

-  விடுதலை ஞாயிறு மலர், 15.6.19

Tuesday, 9 July 2019

கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..?

கச்சத்தீவு...

இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..?

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தததை எதிர்த்தத வாஜ்பாய்
தான் இந்திய பிரதமராக இருந்த
தனது ஆட்சி காலத்தில்

கச்சதீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ..?

இப்போது மத்தியில்ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கச்சதீவை மீட்கும் துணிச்சல் உண்டா...?
-
-----

1967ல் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டு,

திமுக ஆட்சி
அமைந்தது முதல், தமிழ்நாட்டை அழித்துவிட வேண்டும் என்று கொள்கையோடு

இந்திராகாந்தி செயல்பட்டார்.

(இப்போதைய மோடி அரசு போலவே அன்றைய இந்திராகாந்திஅரசும் செயல்பட்டது)

இலங்கை தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒன்று சேர்ந்து

இந்தியாவில்
காங்கிரசு எதிரான அணி ஏற்படுத்தி விடுவார்களோ என்று இலங்கையில் உள்ள தமிழர்களை
அழிக்கும் முயற்சி 1974ல் காங்கிரசு கட்சி தொடங்கிவிட்டது.

காங்கிரசு ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார்

கச்சத்தீவை
இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு,

தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற
கருத்தை அறிய விரும்பவில்லை.

மற்றும்,

அன்றைய முதல்வர் கருணாநிதி

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று கடும்
எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.!

ஆனால்,

அப்போது காங்கிரசு கட்சியின்

தமிழக பொறுப்பில் இருந்தவர்கள்,

தமிழ்நாட்டிற்கு,
தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்பட்டார்கள்..

இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்று
பாராளுமன்றத்தின் மக்களவையில்

பூபேஷ்குப்தா (வ.கம்.) பேசி, பிரதமர்
இந்திராகாந்தியின் பாராட்டை பெற்றார்.

வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க,
பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார்கள்..

தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து

12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை,
இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது.

இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும்,

இலங்கைப்
பிரதமர் திருமதி பண்டாரநாயகாவும்

1974-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி
கையெழுத்திட்டனர்.

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு.

ராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ
12 மைல் தூரத்தில் இருக்கிறது.
முன்பு இந்தத் தீவு,

ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

ஆனால்,

இது தங்களுக்கே சொந்தம் என்று,
சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை
கொண்டாடியது.

இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா
கடந்த ஜனவரி மாதம் டெல்லி
வந்திருந்தபோது பிரதமர் இந்திராகாந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.

கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று,
அப்போது
தீர்மானிக்கப்பட்டது.

“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம்.
அதை இலங்கைக்கு தரக்கூடாது” என்று அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக
அரசு வற்புறுத்தி வந்தது.

அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி

பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது
இதை
வலியுறுத்தினார்.
ஆனாலும்
அப்போது கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று இந்திய அரசு முடிவு
செய்துவிட்டது.

28-6-1974 அன்று, கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையில்
இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே
டெல்லிக்கு விமானத்தில் கொண்டு
வந்தார்.

அதில் இந்திராகாந்தி கையெழுத்திட்டார்.

அதேபோல,
டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங், கச்சத்தீவு
ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார்.

அதில் இலங்கை பிரதமர் திருமதி பண்டார நாயகா கையெழுத்திட்டார்.

இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக
இந்த ஏற்பாடு
செய்யப்பட்டது.

கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது.

கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு
வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது.

அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா
நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள்
படகுகளில் செல்வார்கள்.

இருதேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது
உண்டு.

அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை.

தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும்,
முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு
உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்தது.

இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி
சுவரண்சிங் தாக்கல் செய்தார்.

அப்போது அதன் மீது காரசாரமான விவாதம் நடந்தது.

இரா.செழியன் (தி.மு.க.) பேசுகையில்,

“தமிழ்நாட்டுக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது.

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.

மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:-

“என்னுடைய ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு.

அதை இலங்கைக்கு
கொடுத்தது தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு
தொல்லை கொடுத்து வருகிறது.

எதிர்காலத்தில் போர் மூண்டால்,
இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாக
பயன்படுத்தும் அபாயம் உள்ளது.”
இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.

ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில்,

“இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்யும் பேரம், ரகசியமாக நடந்து இருக்கிறது.
இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுப்பது கேவலம்!” என்று
கூறினார்.

மதுலிமாயி (சோசலிஸ்டு),

பி.கே.தேவ் (சுதந்திரா),

முகமது செரீப் (முஸ்லீம் லீக்),

நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.)

ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப் பேசினார்கள்.

வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில்,

“இந்தியா – இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும்.

இரு தேசங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது”
என்று கூறினார்.

ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,

தி.மு.கழகம், முஸ்லிம்லீக் ,சுதந்திரா,
பழைய காங்கிரஸ்,, சோசலிஸ்டு,  ஜனசங்கம், அ.தி.மு.க. ஆகிய
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகளில்
வலது கம்ïனிஸ்டு, இடது கம்ïனிஸ்டு கட்சிகள் மட்டும்
வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.

சபையை விட்டு வெளியேறும் போது கச்வாய் என்ற ஜனசங்க உறுப்பினர்,

கச்சத்தீவு
ஒப்பந்த நகலை கிழித்து, சபையில் வீசி எறிந்தார்.

இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விவாதத்தின்போது,

எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில்,

“கச்சத்தீவு பற்றி தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே, ஒப்பந்தத்தில்
டெல்லி சர்க்கார் கையெழுத்திட்டு இருக்கிறது.

இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு” என்று கூறினார்.

ராஜ்நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில்,

“ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்,

தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

”ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது”
என்று
அப்துல் சமது
(முஸ்லிம் லீக்)
கூறினார்.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

“இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்று
பூபேஷ்குப்தா (வ.கம்.) கூறினார்.

முடிவில்,

வ.கம்ïனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக

மற்ற கட்சிகள் வெளிநடப்பு
செய்தன.

இலங்கை பாராளுமன்றம் கூடியது.

கச்சத்தீவை இலங்கைக்கு பெற்றுத்தந்ததற்காக

பிரதமர் திருமதி பண்டாரநாயகாவை
உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

திருமதி பண்டாரநாயகா பேசுகையில்,

கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக
இந்திரா காந்தியை பாராட்டுவதாக தெரிவித்தார்.

சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் மிகவும் உதவியதாக
அவர் சொன்னார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கலாமா,? கூடாதா ?

என்பது குறித்து இந்திரா காங்கிரஸ்
கட்சியில் பிளவு ஏற்பட்டது.

“இலங்கைக்கு கச்சத்தீவை இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்” என்று
தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார்.

கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என்று கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர்
சொன்னார்.

இ.காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரான பழைய முதல்-மந்திரி பக்தவச்சலமும்
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால்,

சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து,

முதல்-அமைச்சர் கூட்டிய
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு,

“கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது”

என்ற தீர்மானத்தில் கையெழுத்து
போட்டார்.

இதேபோல் மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை
ஆதரித்து கையெழுத்திட்டார்.

இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு தெரிவித்தார்.

“அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும்,

ஆறுமுகசாமியும்
கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள்
கட்சியின் கொள்கை.

அதற்கு எதிரான தீர்மானத்தில் அவர்கள் கையெழுத்திட்டது தவறு” என்று
அவர்
சொன்னார்.

சட்டசபை இ.காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை
ஆதரித்தார்.

ராமையாவுக்கு, மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-

“முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில்

நானும்,
மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான்.

மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை.

நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த
பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்றுதான்
நினைப்பார்கள்.

அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு
எதிரானது அல்ல.

மிக முக்கியமான இந்த பிரச்சினையில் நாங்கள் ஓடி ஒளிய விரும்பவில்லை.

அதனால் நாங்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டோம்.” மேற்கண்டவாறு ஆறுமுகசாமி
கூறினார்.

கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து,

ஜுலை 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.
சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதல்-அமைச்சர் கருணாநிதி
தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த கூட்டங்களில்
பேசினார்.

கச்சத்தீவை தானம் செய்வது சட்ட விரோதம் என்றும்,

இந்திரா காந்தியும், திருமதி
பண்டாரநாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும்,

சென்னை ஐகோர்ட்டில்
வழக்குத் தொடரப்பட்டது.

தமிழ்நாடு ஜனசங்கத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

விசாரணைக்குப் பிறகு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பலத்த எதிர்ப்பு இருந்தாலும்,
கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.

கச்சத்தீவு...

1974 ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் இருந்தபோதுதான் தி.மு.கவின் எதிர்ப்பையும்
மீறி இந்திராகாந்தியால் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் இருந்தபோதே தி.மு.கவின் பொதுக்குழுவில்
பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"இந்தியாவுக்கு சொந்தமானதும்,

தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான
கச்சத்தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு
செய்துள்ள ஓப்பந்தத்தை கழகப் பொதுக்குழு மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிகளுக்கு எதிராக இந்த ஒப்பந்தம்'
அமைந்துவிடக்கூடாது என்று தமிழக அரசு பலமுறை ஆதரங்களுடன் மத்திய அரசை அணுகித்
தடுத்தும் கூட,அதனை அலட்சியப்படுத்திவிட்டு

மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு
அளித்த செயல் மிகவும் வேதனை தருவதாகும்.

கச்சத்தீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல்

,மத்திய அரசு
மறுபரீசிலனை செய்து அந்தத் தீவின் மீது இந்திய அரசுக்கு அரசுரிமை இருக்குமாறு
ஒப்பந்தத்தை திருத்த வழிவகை காண வேண்டுமாறு பாரதப் பிரதமர் இந்திராகாந்தியை
இந்தப் பொதுக்குழு வலியுறுத்திறது.."...

தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாது

14.07.1974 ஆம் நாளில் திமுக தமிழகம்
முழுவதும்

"கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள்"நடத்தப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம் கூடாது என்றும்,

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே
என்றும் பல்வேறு ஆதரங்களோடு அன்றைய

தமிழக முதல்வர் கருணாநிதி 06.01.1974 ஆம்
ஆண்டே அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவருக்கு கடிதம் எழுதியும் இருந்தார்.

அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் வெளியறவுத்துறை அமைச்சர்
அவர்களையும்,
அதிகாரிகளையும் தமிழகத்திற்கு அனுப்பி இந்த விசயம் பற்றி அன்றைய
தமிழக முதல்வர் கருணாநிதியிடம் விவாதிக்க அனுப்பி இருந்தார்கள்.

அந்த விவாதத்தில் தமிழக அரசு எக்காரணத்தையும் கொண்டும் கச்சத்தீவை இலங்கைக்கு
கொடுக்க கூடாது என்று கடும் ஆட்சேபனைகளை அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறித்தான் என்று கச்சத்தீவை இலங்கைக்கு
மத்திய அரசு வழங்கியது.

இந்த கச்சத்தீவு பிரச்னை 23.01.1974 ஆம் நாள் அன்று பாராளுமன்றத்தில்
விவாதிக்கப்பட்ட போது,

"கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை
நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்"
என்று கழத்தின் சார்பாக மக்களவையில் இரா.செழியன் அவர்களும்,
மாநிலங்களவையில்
எஸ்.எஸ்.மாரிசாமியும் கருத்து தெரிவித்தார்கள்.

அதன் பிறகு ஜெயலலிதா ஒரு முறை விடுத்த அறிக்கையில்"கச்சத்தீவு பிரச்னை என்பது
மற்றொரு நாட்டுடனான பிரச்னை.

அதை மீட்கக் கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கின்றது.

மாநில முதல் அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்து இருந்தால் அன்றைக்கே
கச்சத்தீவு மீட்கப்பட்டிஇருக்கும்"
என்று அவரே தனது அறிக்கையில் தன்னையும்
மறந்து சொல்லி இருக்கின்றார்.

கச்சத்தீவைப் பொறுத்தவரை மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று சொல்லிய
ஜெயலலிதா,

"கச்சத்தீவை கருணாநிதிதான் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்"
என்று திரும்ப
திரும்ப சொல்லும் ஜெயலலிதா,

அப்போது எல்லாம் இது மத்திய அரசுக்கான அதிகாரம் என்ற நினைவு வரவில்லையா?

1991 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோட்டை கொத்தளத்தில் கொடி
ஏற்றிவைத்துப் பேசும் போது,

"கச்சத்தீவை மீட்பேன்" என்று சபதமிட்ட ஜெயலிலதா,

அந்த சபதத்தை நிறைவேற்ற
அதன்பின் ஆட்சி செய்த அந்த ஐந்தாண்டு காலமும் அதற்காக ஒரு சிறிய துரும்பையாவது
கிள்ளிப்போட்டு இருப்பாரா?..

அதற்குப்பின்,

20.04.1992 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது

"கச்சத்தீவை மீட்க
வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

ஆனால்,

கச்சத்தீவை மீட்பது என்பது விரைவில் நடக்க கூடிய ஒன்றாகத் தெரியவில்லை' என்று
கூறியிருகிறார்.

இதற்கு அடுத்து 30.09.1994இல் அப்போது தமிழக முதல்வராக இருந்த
ஜெயலலிதா,

அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில்,

"The ceding of this tiny island to the Island Nation had been done by the
Government of India in the interest of better bilateral relations"..

அதாவது,

"தீவு நாடான இலங்கைக்கு,இந்த சின்னஞ்சிறிய தீவினை(கச்சத்தீவு) இந்திய அரசு
பிரித்துக் கொடுத்தது,
இந்தியாவிற்கும்
,இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவிட
வேண்டும் என்பதற்காகத்தான்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இவர் அன்று சொன்ன பாடத்தைத்தான் இன்னமும் மத்தியிலே உள்ள பெரிய மனிதர்களும்
சொல்லி வருகின்றார்கள்.

இன்னும் ஒரு ஆதாரத்தோடு சொல்வது என்றால்

தமிழக சட்டமன்றத்தில் 29.03.1972 ஆம்
நாள் அன்று

கச்சத்தீவு பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு

அன்றைய முதல்வர்
கருணாநிதி சொன்ன பதிலில்..

"நாம் கச்சத்தீவை குறித்த நியாமான விவகாரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்து
உள்ளோம்.

கச்சத்தீவு பிரச்னை இந்திய அரசு தலையிட்டு ஒரு நல்ல நிலைமையை
எடுத்தி.பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும்.." என்று சொன்னார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இன்று கச்சத்தீவு பற்றி வாய் கிழியும் பேசும்
ஜெயலலிதாவின் கட்சியான அதிமுக,

கழக ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவை திரும்ப
பெறுவதற்கான தீர்மானத்தை அன்றைய ஆளும்கட்சியான திமுக கொண்டு வந்தபோது அதனை
ஆதரிக்காமல் வெளி நடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது..

1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதிதான் அப்படியொரு அறிவிப்பு மத்திய
அரசிடம் இருந்து வந்தது.

அதாவது,

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று.அதே ஜுன் 29 ஆம் தேதி அன்று அன்றைய
முதல்வர் கருணாநிதி அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமை செயலகத்தில்
கூட்டி,அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

ஆனால்,

அப்போதும் அந்த கூட்டத்தில் அதிமுக கலந்து கொண்டு தன் கருத்தை பதிவு
செய்யவில்லை.

அந்த தீர்மானத்தின் அடைப்படையில் அன்றைய
முதல்வர் கருணாநிதி,
பிரதமருக்கு
எழுதிய கடிதம் வருமாறு...

"On behalf of the Government of TamilNadu and behalf of the people of
Tamilnadu,I am constrained to express of our deep sense of dis-appointmnet
over the resent indo-Sri Lanka Agreement,according to which sri-Lanka's
claim to Kachativu has been conceded by the Government of India.May I
express the hope that you will take into consideration the decision
contained in the Resolution and take appropriate action.."..

ஆனால் ,

23.07.2003 ஆம் நாள் அன்று ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு
எழுதிய கடிதத்தில்,

இந்தியா,இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நல்லுறைவை பேணவும்,

தமிழக மீனவர்கள்
பாரம்பரியாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பற்றவும் உள்ள ஒரே வழி என்று
சொல்லிவிட்டு மேலும் சொல்கிறார்..

"The best posssible solution is to get the island of Katcha theevu and
adjacent seas on lease in perpertutity solely for fishing,drying of nets
and pilgrimage.Sri Lanka's Sovereignty over Katcha theevu could be upheld
at the same time.."

(அதாவது "கச்சத்தீவையும் அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக
மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும்,
வலைகளைக் காய வைப்பதற்கும்,
யாத்திரை
செல்வதற்கும் நிரந்திர குத்தகைக்கு பெறலாம்:

அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்,,)

இப்படி எல்லாம் எழுதியும்,பேசியும் வந்தவர்தான் இந்த ஜெயலலிதா..

இறுதியாக ஜெயலலிதாவின் விசுவாசிகளிடம் ஒரு கேள்வி..

1991 முதல் 1996 வரையிலும்,

2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இது
வரையிலும் இந்த அம்மா தானே ஆட்சியில் இருந்தார்கள்.?

இது வரையிலும் என்ன செய்துவிட்டார்..?

கச்சத்தீவை வாங்கித்தந்து விட்டாரா?

"கச்சத்தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரச்க்குதான் உண்டு
என்றும்,

இந்தியாவிற்கும்,
இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண்டும்
என்பதற்குத்தான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது" என்றும்,

கச்சத்தீவில்
இலங்கைக்கு உள்ள இறையாண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று
பேசிய
அறிக்கை கொடுத்த ஜெயலலிதா,

கச்சத்தீவை கருணாநிதிதான் தாரை வார்த்துவிட்டார் என்றும்,
அதை நான் மீட்பேன் என்பது எப்பிடிப்பட்ட "கபட நாடகம்" என்பது தமிழ்நாட்டு
மக்களுக்குத் தெரியாதா என்ன..?

கச்சத்தீவு பற்றி ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது 2008
ஆம் ஆண்டு.

ஆனால்,

அதற்கு முன்பே திராவிட கழக பொது செயலாளர் திரு.கீ.வீரமணி அவர்கள் இதே
கச்சத்தீவு பிரச்சனைக்காக 1997 ஆம் ஆண்டே ஒரு வழக்கினைத் தாக்கல்செய்து
உள்ளார்.

ஆனால்,

பல ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் ஒரு முடிவும் காணப்படவில்லை என்பதுதான்
உண்மை..
---
reporterhameed@gmail.com  -99410 86586