Tuesday 3 July 2018

பெல் ம.ஆறுமுகம் பணிநிறைவு - பாராட்டு விழா

கழகத் துணைத் தலைவர், செயலவைத் தலைவர் பங்கேற்று வாழ்த்துரை








திருச்சி, ஜூன் 27- பெல் ம.ஆறு முகம் பணிநிறைவு - - பாராட்டு விழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் பங் கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

துணைத் தலைவர்


ஜூன் 23 மாலை  4.30 மணி யளவில்  பெல் நிறுவனத்திலி ருந்து பணிநிறைவு பெற்று வந்த ம.ஆறுமுகத்திற்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஆறுமுகத்திற்கு  சால்வை அணிவித்து வாழ்த்தி னர்.

தொடர்ந்து பெல் நிறுவனத் திலுள்ள டாக்டர் அம்பேத்கர், காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ம.ஆறுமுகம் மாலை அணிவித்தார். பின்னர் திருவெறும்பூரி லுள்ள தந்தை பெரியார் படிப் பகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ம.ஆறுமுகம் மாலை அணிவித் தார்.

பாராட்டு


அதனைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவிற்கு மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப் பினர் மு.சேகர் முன்னிலை வகித்தார்.  செ.பா. செல்வம் வரவேற்புரையாற்றினார். கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்று கையில், தோழர் ம.ஆறுமுகம் ஓய்வு பெறும் இந்த நாளன்று   நான் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச் சியளிக்கிறது. நான்  அரசுப் பணியில் இருந்து வெளியே வந்ததுதான் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்தது. அதனால்தான் இந்த இயக்கத் திற்கு முழு நேரமாக வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில்    தோழர் ஆறுமுகத்தை நீங்கள் எல்லாம் வழியனுப்ப வந்துள்ளீர்கள். நான் இயக்கப் பணியாற்றுவதற்காக அழைத் துச் செல்ல வந்திருக்கிறேன். தோழர் ஆறுமுகம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழி லாளர்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத் தியிருக்கிறார். இந்த பெல் நிறுவனத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. நிறுவனம் தொடங்கிய காலத்தில் வெறும் மலையாளி  கள் மட்டுமே பணியமர்த்தப் பட்ட நிலை இருந்தது. அதனை மாற்றி அவர்களையெல்லாம் விரட்டிய பெருமை இந்த இயக்கத்திற்கும், தந்தை பெரி யாருக்கும் உண்டு. தோழர் ஆறுமுகத்தை பற்றி தோழர்கள் நிறைய எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய இயக்க தோழருக்கு இவ்வளவு பெரிய பெருமை இருக்கிறது.  இவ்வளவு பெரிய சாதனையா ளராக இருந்தார்  என்பதை எண்ணி பார்க்கின்ற போது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக் கின்றது. அவர் தொடர்ந்து இயக்க பணியையும், சமுதாய பணியையும் ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக புலவர் முரு கேசன்,  கிருஷ்ண குமார், சுதர் சனம்,  பூபாலன், மாரியப்பன் ஆகியோர் பேசினார்கள். காட்டூர் சங்கிலிமுத்து, தமிழ்ச்சுடர், அமைப்புச் சாரா தொழிற்சங்க செயலாளர் திரா விடன் கார்த்திக், தாமஸ், விடு தலை கிருஷ்ணன், ஆண்டிராஜ், சிவானந்தம், சுரேஷ், செங்கை குயிலி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பெல் ஒப்பந்த தொழிலாளர்களும் (எல்.சி.எஸ்) திராளாக கலந்து கொண்டனர். நிறைவாக ம. ஆறுமுகம் ஏற்புரை வழங்கி உரையாற்றினார். க.சுப்ரமணி யன் நன்றி கூறினார்.

பாராட்டு விழா


ம.ஆறுமுகத்தின் பணி நிறைவு பாராட்டு விழா இரண் டாவது நாள் முறையே   பெல் சமுதாய கூட்டத்தில் ஜூன் 24 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செ.பா. செல்வம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் மு.நற் குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், பொதுக்கு உறுப் பினர் மு.சேகர், ஒன்றிய தலை வர் மாரியப்பன், ஒன்றிய செய லாளர் தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு


இவ்விழாவில் கலந்து கொண்டு கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசு கையில்,

நான் தொழிற்சங்க பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு இந்த பெல் நிறுவனத்தில் 3 நண்பர் கள் கிடைத்தார்கள். அதில் மறைந்த நண்பர் மேகநாதன், இனியன் (எ) லூக்காஸ், ம. ஆறுமுகம். இவர்களில் ம.ஆறு முகத்தின் பணி இந்த பெல் நிறுவனத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இன்றைக்கு முழுமையாக விடுதலையாகி வெளியே வந்திருக்கிறார். அவரது உழைப்பை, போராட்டத்தை இனிமேல் இந்த சமூகம் முழுக்க பயன் படுத்திக் கொள்கிற வாய்ப்பை இந்த நிறுவனமும், இயற்கை யும் அவரது வயதும், சேர்த்து நமக்கு அளித்திருக்கிறது. ஆறு முகம் பற்றிய ஒரு குறும் படத்தை மிக அருமையாக இங்கே ஒளிப்பரப்பினார்கள். ஆறுமுகத்தால், உருவாக்கப்பட் டவர்கள், உருவாக்கிய இந்த குறும்படம் மிகவும் தேவையான ஒன்று. பாராட்டுக்குரியது. இந்த நிறுவனம் ஆறு முகத்தை பல்வேறு வகையில் மிரட்டி விடலாம் என்று எண் ணியது. ஆனால் அவர்கள்தான் மிரண்டு போனார்கள். தந்தை பெரியார், அம்பேத்கர் இந்த இருபெரும் தலைவர்களின் கருத்தையும் உள்வாங்கிய நண் பர் ஆறுமுகம்,  தொழிலாளர்கள் மத்தியிலும், சமுதாயத்திற்கும் பாடுபட்டார். இனிமேலும் முழு நேரமாக உழைக்க வேண் டும். அவருக்கு பணியிலிருந்து தான் ஓய்வு. சமூகப் பணியிலி ருந்து  அவருக்கு ஓய்வில்லை. தொடரட்டும் அவரது பணி என்று கூறினார்.

தொழிற்சங்கம்


திராவிடர் கழக தலை மைக்கழக பேச்சாளர் அதிரடி க.அன்பழகன், கவிஞர் ப.சங் கரன், சந்திரசேகர் (எஸ்.சி.யூ), ஆறுமுகம் (ஆதித்தமிழர் பொறி யாளர் பேரவை), இளந்தமிழன் (எல்.எல்.எப்), அருணா (சி. அய்.டி.யூ), சுந்தரராஜன் (பு.ஜ. தொ.மு), அய்யாதுரை (அம் பேத்கர் தொழிற்சங்கம்) உள் ளிட்ட ஏராளமான தொழிற்சங்க பிரதிநிதிகள்,பெல் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பாராட்டினார்கள்.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் புதிய இணைய தளத்தை பெல் ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.

நிறைவாக ம.ஆறுமுகம் ஏற்புரையாற்றினார். சுதர்சனம் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 27.6.18

No comments:

Post a Comment