புதுடில்லி, ஜூன் 23 வருங்கால வைப்பு நிதிப் பலன்களை 60 வயதுக்குப் பிறகு பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியத்தில் 8.16 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது.
அதேபோல், 59 வயதுக்குப் பிறகு வைப்பு நிதி பலன்களைப் பெற விருப்பம் தெரிவிப்பவர் களுக்கு ஓய்வூதியம் 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் இணைய விரும்புபவர்கள், சம் பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்காக விண்ணப்பிக்க வேண் டும் என்று இபிஎஃப்ஓ அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 58 வயது பூர்த்தி யடைந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரு கிறது. அந்தப் பலன்களை ஓரிரு ஆண்டுகள் கழித்துப் பெற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு மட் டுமே புதிய சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது.
-விடுதலை,23.6.16
No comments:
Post a Comment