Friday, 9 December 2016

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 15 ஜாதிகள் சேர்ப்பு

புதுடில்லி, டிச.9 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிதாக 28 ஜாதிகளை சேர்த்து  திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி) பரிந்துரை செய்திருந்தது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை யில் குறிப்பிடப்பட்ட 28 ஜாதிகளில் 15 புதிய ஜாதிகளை மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதில், பீகாரின் கதேரி/இடாபரோஷ், ஜார்கண்ட்டின் ஜோரா, காஷ்மீரின் லபனா ஆகிய 3 ஜாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற 9 ஜாதிகள் ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளின் உட்பிரிவுகளாகும். மீதியுள்ள 3 ஜாதிகள் திருத்தத்தின்மூலமாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போதுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று பலனடைவார்கள். அத்துடன் மத்திய அரசு நலத்திட்டங்களின் பலன்களையும் பெற முடியும்.
-விடுதலை,9.12.16

No comments:

Post a Comment