Wednesday 8 June 2016

கடவுளுக்கு என்ன காது செவிடா? ஏன் ஒலிபெருக்கி சத்தம்?


உயர்நீதிமன்றம் தொடுக்கும் வினா!

சென்னை, மார்ச் 29
_ சென் னையைச் சேர்ந்த  குமார வேலு, சென்னை உயர்நீதி மன்றத்தில்  தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிக அளவு கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியைப் பயன் படுத்துவது அதிகரித்து வருகிறது.  அதன்படி, வழி பாட்டுத் தலங்கள்,  திரு மண மண்டபங்கள் மற் றும் பொது நிகழ்வுகளில் அதிக சத்தம் தரும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிகாலை மற் றும் நள்ளிரவு நேரங்களி லும்கூட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, இந்த வழக்கில் ஏற்கெனவே உச்சநீதிமன் றம் வகுத்த விதிமுறைகளை முறையாக பின்பற்ற தமி ழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.
இந்த மனு  தலைமை  நீதிபதி கவுல், நீதிபதி சுந்த ரேஷ் ஆகியோர் அடங்கிய முதல்  டிவிஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு வுக்கு தமிழக உள்துறை செயலாளர்,  தமிழக டிஜிபி, சென்னை காவல் துறை ஆணையர் ஆகி யோர் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத் தனர்.
அதன்படி, இந்த வழக்கு நேற்று (28.3.2016) மீண்டும் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத் தீர்ப் பின்படி கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை கோயில் களில் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன் படுத்தினால் டிஜிபி நட வடிக்கை எடுக்கலாம். மனு தாரர் மனுவில் குறிப்பிட்ட 44 இடங்களில் உள்ள இத்தகைய ஒலி பெருக்கி உள்ள இடத்தை டிஜிபி பார்வையிட்டு உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறியிருந் தால் நடவடிக்கை எடுக் கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
குறிப்பு: கோவில்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியைப் பயன்படுத்தினால், தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
மேலும் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அதிக ஒலி வைத்து கடவுளை வழிபட வேண்டும்  என்று கடவுள் கருத்து கூற வில்லை. எனவே, இதில் டிஜிபி உரிய நடவடிக்கை எடுத்து  விட்டு அறிக் கையை நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி தாக்கல் செய்ய  வேண்டும் என்று டிஜி பிக்கு உத்தரவிடுகிறோம் என்றனர்.
விடுதலை,29.3.16

No comments:

Post a Comment