மூளை பாதிப்பு, மூட்டுகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு
டெக்ஸாஸ், ஜூன் 5, இரவு மற்றும் பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படை யில் பணிபுரிபவர்களுக்கு மார டைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாதம் போன்ற நோய் அச்சுறுத் தல் உள்ளதாக அமெ ரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய் வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கால் சென்டர்களிலும், அய்.டி. நிறுவனங்களில் பணி புரியும் இளைய தலைமுறையினர் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புபவர்கள் அதி காலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ இல்லம் திரும்புகின்றனர்.
பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது. சரியான தூக்க மின்மை, நேரத்திற்கு சாப்பி டாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடு வதனால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகிவிடுகிறது.
இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல் பருமன், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிவிடு கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் ஆய்வில் கூறியுள்ளதாவது:
இரவு மற்றும் பகல் என 24 மணி நேர சுழற்சியில் நமது உடல் உறுப்புகளின் இயக்கங் களைக் கட்டுப்படுத்தும் “உயிரி யல் கடிகாரம்‘ நம் உடலில் செயல்பட்டுவருகிறது.
இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அவை மேற்கொண்டு வருகிறது.
எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல் பாடுகளுக்கு இந்த “கடிகாரம்‘ மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல் பாடுகளுக்கு இந்த “கடிகாரம்‘ மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவர்கள் தூங்காமல் முழித்து இருப்பதற்காக டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்கு கிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக் கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது.
இதனால், 24 மணி நேர இயற்கையான சுழற்சி தடைபடு வதுடன் உடலியக்க செயல் பாடுகளும் பாதிப்படைகிறது.
அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படு கிறது. தூக்கத்தை கட்டுப்படுத்த வும் மற்றும் தூக்கத்தை வரவ ழைக்கவும் உதவும் மெலடோ னின் சுரப்பு குறைய ஆரம்பிக் கிறது. இதனால் உடல் பாதிக்கப் படுகிறது.
மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத் தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்ற வற்றுக்கு முக்கிய காரணமா கின்றன.
இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக் கப்பட்டு தீவிர ரத்த அடைப் புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப் பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படை யில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டு மின்றி, உணர்விழத்தல், மூட்டு களின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாக உள்ளதாக அந்த சோதனையில் தெரியவந்துள் ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அர ணாக விளங்கி, நரம்பு மண்ட லங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.
ஆனால், வயதான பெண் களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ள டக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல் கலையின் இந்த ஆய்வு முடிவுகள் “எண்டோகிரினாலஜி’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-விடுதலை,5.6.16
No comments:
Post a Comment