Saturday 25 November 2023

கல்கி'யும் கணபதியும்!

''கல்கி' வார இதழுக்கு


 'கல்கி'யும் கணபதியும்!


தங்கள் பத்திரிகையில் வரும் 'கணபதி விஜயம்' மற்றும் பல மத பிரச்சாரங்களையும் நிறுத்துங்கள். இனியும் மக்களை முட்டாளாக்க

முடியாது.


22-8-82 மாலை சென்னை தொலைக் காட்சியில்‘வினாயகர் விஜயம்' என்ற படம் ஒளிபரப்பப்பட்டது. அதில் வினாயகர் 'மூசிகா சூரனை'   கொல்வதற்காக படைக்கப்பட்ட தாகவும்! 'யானைத் தலையனை கஜமுகா சூரன்) கொல்ல வினாயகர் படைக்கப் பட்டதாகவும்,


தொலைகாட்சியில் கஜமுகா சூரனின் தலையை வெட்டி விநாயகருக்கு பொருத்திய தாகவும், உங்கள் கதையில் 'இறக்கும் தருவாயிலுள்ள யானையின்' தலையை பொருத்தியதாகவும் உள்ளது. உங்கள் கதையில் பிள்ளை யாருக்கு யானை தலை வந்தபிறகும் கஜமுகா சூரன் உயிருடன் இருப்பதாக எழுதியுள்ளீர்கள்.


உங்கள் கதையில் பிள்ளையாருக்கு பார்வதியே தொப்பை வயிரும், கொடூர உருவமும் வர'வரம்' தந்ததாகவும், தொலைக் காட்சியில் பார்வதியே பிள்ளையாரிடம், பிரம்ம சரிய விரதத்தை முடித்து விட்டு வந்தவுடன் "இதென்ன கொடூர உருவம்' என்று கேட்பது போலவும், அதற்கு பிள்ளையார் பதில் சொல்வதுபோலவும் காட்டினர். தொலை காட்சியையும், கல்கியையும் கண்ணுற்றவர்கள் உங்கள் முரண்பாடான கேலிக்கூத்துக்களை எள்ளிநகையாடுகின்றனர்.


"திருவிளையாடல்' படத்தில் 'ஞானபழத் திற்காக' முருகனும் பிள்ளையாரும் சண்டை போட்டு கொண்டு உலகத்தை முருகன் மூன்று முறை சுற்றுவதாகவும், பிள்ளையார் நாரதரையும் அம்மை அப்பனையும் கேட்டுகொண்டு பிறகு அம்மை அப்பனை சுற்றி வந்து பழத்தை பெற்று கொண்டதாகவும், இதனால் முருகன் கோபமுற்று கோவணாண்டியாக மாறியதாகவும்,


தொலைக் காட்சி ஒலிபரப்பான 'வினாயகர் விஜயம்' படத்தில், பதவிக்காக சண்டை போட்டுக் கொண்டு, முருகன் உலகத்தை சுற்றியதாகவும், விநாயகன் அம்மையப்பனை சுற்றி வந்ததை பார்த்து முருகன் கோபம் முறாமல் 'எப்படி?' என்று (நாரதர், அம்மையப்பன் போன்ற அனைவரும்) கேட்க, விநாயகர் அவர்களுக்கு விளக்கியவுடன் முருகன் தலை வணங்குகிறான்.


'பிள்ளையார் பிறக்கும் போதே தலை இல்லாமல் பிறந்ததாகவும்' கஜமுகா சூரனைகொன்று தோலை உரித்து ஆடையாக சிவன் உடுத்திக் கொண்டதாகவும், தலையை பிள்ளையாருக்கு பொருத்தியதாகவும் 'பால மித்ரா' பத்திரிகையிலும் வந்தது.


'தேவாரத்தில்' பிள்ளையார் சிவனும் பார்வதியும் யானைகளாக உருமாறி உணர்ந்ததால் யானை தலையுடன் பிறந்ததாக உள்ளது.


கல்வியின் 'கோகுலம்' பத்திரிகையில் முன்பொரு முறை பிள்ளையாருக்கு தந்தம் ஒடிந்தது பற்றி மகாபாரதத்தை பிள்ளையார் தந்தத்தை ஒடித்து எழுதியதாகவும், 'அம்புலி மாமா' பத்திரிகையில் 'மூசிகா சூரனை' கொள்ள தந்தத்தை ஒடித்து அனுப்பியதாகவும் எழுதப்பட்டிருந்தன. (மூசிக்கா சூரனை கொள்வதற்காக என்பதை 'விநாயகர் விஜயம்' படத்திலும் காட்டப்பட்டது)


'அம்புலி மாமா' அக்டோபர் 1981 இதழில் பிள்ளையாருக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவிகள் என்றும் உள்ளது. ஆனால் நீங்களோ பிள்ளையாருக்கு திருமணம் ஆகவில்லை, தாயைப் போல மனைவி கேட்டதால் குளக்கரையிலும், சந்து முனைகளிலும் உட்கார்ந்து கொண்டதாக கூறுகிறீர்கள்.


பிள்ளையார் பிரம்மச்சாரி என்று கூறுவோரே இப்போது வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டிலேயே அநேக கோயில்களில் பிள்ளையார் இரண்டு மனைவியுடன் இடம்பெற்றுள்ளது.


இம்மாதிரியான முரண்பாடுகள் நிறைந்த மத மூடநம்பிக்கைகளை இனிமேலாவது தங்கள் பத்திரிகையில் எழுதி மக்களை மடையர்களாக ஆக்காதீர்கள்.


குறிப்பு :- இக்கதைகளுக்கு ஆதாரங்கள் புராணங்களிலேயே உள்ளது, இருந்தாலும் சமீபத்திய ஆதாரங்களே சிறந்தவை என்பதால் படக்கதைகளிலும் பத்திரிகைகளிலும் இருந்து ஆதாரங்கள் காண்பித்துள்ளேன்.

                     - செ.ர. பார்த்தசாரதி

               29-பி, மேல்பாடி முத்து தெரு,

                  நுங்கம்பாக்கம், சென்னை 34

                  -உண்மை மாதம் இருமுறை இதழ்

No comments:

Post a Comment