Monday, 29 November 2021
Sunday, 28 November 2021
இந்தியாவில் சத்ரியர்கள் என்றுயாரும் இல்லை; சூத்திரர்களுக்கு சொத்தும் இல்லை!
#இந்தியாவில் சத்ரியர்கள் என்றுயாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண் 1.
பார்பனர்கள் வாதம்,இந்துக்களில்
பிராமணர்,
சத்ரியர்கள்
இருவரைத்தவிர
யாருக்கும் சொத்துக்களை வாங்கவே விற்கவோ உரிமையில்லை.
மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்ரியர்கள் மட்டுமே சொத்துக்களை வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
புராணகாலத்தில்
#பரசுராமர் தன்தந்தையை ஒரு சத்ரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்ரியர்களையும் கொன்று விட்டார்.
எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும்
பார்பனர்,
வைசியர்,
சூத்திரர்,
பஞ்சமர்
என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள்.
மனுதர்மம் படி இவர்களில் பார்பனரைத் தவிர வேறு யாருக்கும்
சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை!
எனவே பார்பனரைத் தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்கு 1837ல் பார்ப்பார் மனு கொடுத்தனர்.
நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் ப்ரைவி கவுன்சில் இப்படி ஒரே அடியாக உங்கள் புராணகதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.
நிச்சயம் சத்ரியர்கள் இருப்பார்கள் என்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண்-2-
#ஆங்கிலேயரின்சட்ட ஆவண எண்
(I.L.R.10 I.L.R.12) 1886:
இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.
இதற்கு நடுவே நடந்த
#சிப்பாய்கலகம் பற்றியெல்லாம்,பார்ப்பானனுக்கு கவலை இல்லை,
இந்தியாவில் சத்ரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகின்றான்.
இந்த வழக்கு வழக்கம்போல பார்ப்பனருக்கும்,வங்காள மற்றும் பீஹாரின் காயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்ரியன் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது.
இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள காயஸ்தா பிரிவினர் சத்ரியர் தான் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் கொடுத்த வழக்கு எண்--3.
ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண்(1916)20Cal.W.N.901).
1916ல் மறுபடியும் பார்ப்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள காயஸ்தா பிரிவினர் சத்ரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்ட்டில் தீர்ப்பை பெறுகிறார்கள்.இந்த வழக்கு 1926ல்தான் முடிகிறது.
இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண்--4.
ஆங்கிலேய சட்ட ஆவண எண்.L.R(1928)52 Bom.497
மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த பார்பனர் 1926-ல்
#வெங்கோஜி
அல்லது
#எக்கோஜி
என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்ரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.
அந்த வழக்கின் 229பக்க தீர்ப்பில்,
மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்(long gap from 1600-1900).
1)முதல் ஐந்து குடும்பங்கள்
2)இரண்டாவது 96குடும்பங்கள்
3) மற்றவர்கள்
என்று பிரிக்கலாம்.
இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்ரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள்
சத்ரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது.
இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண்--5.
மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927ல் நாங்களும் யாதவ் குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்ஷம்,
நாங்களும் சத்ரியர்கள்தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க,
எதிர்த்து வாதாடிய பாராபனர்கள் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கின்றனர்.
இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்ப்பார் நிறுவ முயன்றது என்னவென்றால்,இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை.
இந்து மனுதர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து
கொள்ளலாம்!
படிக்கலாம்!
பதவிகளில்
இருக்கலாம்!
இன்னும் பிற பிற லாம்!லாம்!!லாம்!!!
ஆகவே தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்
பார்ப்பான் உங்களை நேரில் பார்க்கும் போது
"#ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்ட பரம்பரை"
என்று தான் சொல்லுவான்.
ஆனால்,
உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.
எல்லா சாதியிலும் உங்கள் சொந்தக்காரன்(என்னையும் சேர்த்துதான்)உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாதீர்கள்.
உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமூகத்தின் மீது அன்பு இருந்தால்,
ஆண்ட பரம்பரை,
புராண கதை
சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு,
உங்கள் சமூகத்தில்,
கல்வியில்,
அறிவில்
நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்.
குறைந்தபட்சம் உங்கள் சமூகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னேற உதவுங்கள்.
பணமாக முடியவில்லை என்றாலும் நேரத்தை கொடுங்கள்.
படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்.
ஆண்ட பரம்பரை கதை பேசினால்,
பார்ப்பான் உண்டியல் மட்டுமே நிறையும்.
அவனை தூக்கி சுமக்கும் தூக்குத் துக்கியாகத்தான் நம்மை வைத்திருப்பான்.
அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்ட்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.
பதிவுக்கு உதவிய நூல்:-
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்
ஆசிரியர்:கிருஷ்ணவேல்.
Thursday, 25 November 2021
பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை
பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை என்று கூறியிருந்தேன். பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள்.
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல் "பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகனே" என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாலை பாடிய பெருங்கடுங்கோ, "தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி" என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை, மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" என வடித்துள்ளார். இப்படிப் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். கொஞ்சம் கடுமையாகப் பாரதியார், "தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என்று எழுதுகின்றார்.
எனவே பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல்.மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது தம்பி" என்று ஒருமுறை என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்பது போல, ஆசிரியப் பணி செய்வோர் ஆசிரியர் என்பது போல, குறியம், சோதிடமும் பார்ப்போர் பார்ப்பனர் என்று ஆயினர். இதில் என்ன வசை இருக்கிறது? மேலும் உயர்வாக இதற்குப் பொருள் சொல்வோரும் உண்டு. பார்ப்பு என்னும் சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்று பொருள். இந்தப் பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. "அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......." எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் பார்ப்பு என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருளில்தான் ஆள்கிறது.
சரி, இதற்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? வலிந்து ஒரு தொடர்பு சொல்லப்படுகிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சின் உயிர் வேறு, முட்டை உடைந்து வெளியில் வரும் குஞ்சின் உயிர் வேறு. எனவே அதற்கு இரு பிறப்பு. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது என்று பார்ப்பன ஆதரவாளர்கள் எழுதுகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும் அதுவும் மிக உயர்வாகவே அவர்களைக் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய முகநூலில், எனக்கான விடையாக ஒரு செய்தியை எழுதுகின்றார். "சுபவீ இதனை வசைச் சொல் இல்லை என்கிறார். ஆனால் ஈ வே ரா வின் வெறுப்புஅரசியலால் இது வசைச் சொல் ஆகிவிட்டது. அதனை அந்தச் சமூகம் விரும்பவில்லை" என்று குறிப்பிடுகின்றார். இங்கும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜெயமோகனும் அதனை வசைச் சொல் என்று கூறவில்லை. பெரியார் பயன்படுத்திய முறையில் அது அப்படி ஆகிவிட்டது என்கிறார். அது உண்மையானால், அது பெரியாரின் திறனுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.
சரி, இது வசைச் சொல் இல்லை என்றாலும், ஐயர், அந்தணர், பிராமணர் என்ற சொற்களை ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கின்றனர். ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள். எனவே ஐயர் என்ற சொல்லைக் கையாண்டால். அவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று பொருள். அவர்கள் எப்படி நமக்குத் தலைவர்கள் ஆவார்கள்? அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உரிய சொல் இல்லை. பிராமணர் என்னும் சொல்லையே பலரும் கையாள்கின்றனர். அதனைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்றாகும். பிரம்மனையே ஏற்காத என்போன்றோர் எப்படிப் பிரம்மனிலிருந்து வந்தவர்களாக அவர்களை ஏற்க முடியும்?
இன்னொரு முதன்மையான பார்வையும் இங்கு தேவைப்படுகிறது. அவர்கள் பார்ப்பனர் என்றால் நான் ஆசிரியராகவோ, சலவைத் தொழிலாளியாகவோ, வேறு எதோ ஒரு தொழில் சார்ந்த பெயருக்கு உரியவராகவோ இருக்கலாம். ஏனெனில் அது தொழில் சார்ந்த சொல். ஆனால் பிராமணர் என்பது வருணம் சார்ந்த சொல். ஆதலால் அவர் பிராமணர் என்றால் நான் சூத்திரனாக அல்லது பஞ்சமனாகத்தானே இருக்க முடியும். (சத்திரியரும், வைசியரும் தமிழ்நாட்டில் இல்லை). அவர்களை உயர்த்தி என்னைத் தாழ்த்தும் அந்தப் பிராமணர் என்னும் சொல்லை சொல்லை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்? இவையெல்லாம் ஒரு புறமிருக்க, நம் எதிர்ப்பு வெறும் சொல்லுக்கானது இல்லை. அவர்களின் செயல்களுக்கானது. கடவுள், மதம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு பிளவுகளை, மோதல்களை இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்னும் அடிப்படையில்தான் நம் அறச்சீற்றம் எழுகிறது. எடுத்துக்காட்டாக, மிகச் சாதாரணமாக இருந்த பிள்ளையார் வழிபாட்டை எப்படியெல்லாம் மோதல்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும் .
- ஒன் இந்தியா இணைய இதழில் அண்ணன்
சுப.வீ.. எழுதிய கருப்பும் - காவியியும் தொடரிலிருந்து !
Courtesy:- Chandran Veerasamy
Subscribe to:
Posts (Atom)