Friday, 17 September 2021

காந்தியை திண்ணையில் அமர்த்தி சோறுபோட்ட சீனிவாச அய்யங்கார்

காந்தியார் 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு சென்னைக்கு வருகிறார். மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்குகிறார். பிரபல அட்வகேட் ஜெனரல், பிரபல வக்கீல், காங்கிரசு தேசிய தலைவர்.

பிறகு 1927 ஆம் ஆண்டிலும் காந்தியார் அங்கு வந்து தங்குகிறார். அப்பொழுது இந்த இடைவெளியில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன? காந்தியாரும் - பன்னீர் செல்வமும், அதேபோல, நம்முடைய கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த உமாமகேசுவர பிள்ளை போன்றவர்களும் சந்தித்து, அய்யா தமிழ்நாட்டில், பார்ப்பனர் - பார்ப்பனரல் லாதார் பிரச்சினை உச்சக்கட்டமாக இருக்கிறதே, நீங்கள் பெரியாரை அழைத்துப் பேசவேண்டாமா? சமாதானம் செய்ய வேண்டாமா? இந்தப் பிரச்சினையை பெரியார் தீர்க்கவேண்டும் என்று விரும்புகிறாரே, என்று அய்யாவின் சார்பில் காந்தியாரிடம் சொல்கிறார்கள்.

அதற்கு காந்தியார் என்ன சொல்கிறார் தெரியுமா? யாருக்காவது சந்தேகம் இருந்தால், காந்தி நிலையம் வெளியிட் டிருக்கிற, ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்கிற நூல் ஆயிரம் பக்கம் இருக்கின்ற நூலில் இருக்கிறது, அதனை பாருங்கள்.

காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - சுயமரியாதை இயக்கம்

காந்தியார் சொல்கிறார்,

‘‘இல்லை, இல்லை, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இப்பொழுது குறைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு நான் இங்கு வந்தபொழுது, சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் நான் உட்கார வைக்கப்பட்டேன். வீட்டின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இன்றைக்கு அப்படியில்லை, என்னுடைய மனைவி சீனிவாச அய்யங்கார் வீட்டு சமையலறை வரையில் செல்கிறார்; நானும் உள்ளே செல்கிறேன்’’ என்றார்.

சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி

அதற்கு என்ன காரணம்? சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி; சீனிவாச அய்யங்கார்களுக்கே மிரட்சி. அதனால் ஏற்பட்டது மிகப்பெரிய வாய்ப்பு. ஆகவேதான், இனிமேலும் காந்தியாரை திண்ணையில் உட்கார வைத்தால், நம்மை தோலை உரித்துவிடுவார்கள், வருணாசிரமத்தினுடைய உருவம் தெரிந்துவிடும் என்று.

காந்திக்கே வழி தந்த இயக்கம் - காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - பெரியாருடைய இயக்கம் - சுயமரியாதை இயக்கம்.

4.2.17 மதுரை - வேன் அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் பேருரை

- விடுதலை, 7.2.17


Wednesday, 15 September 2021

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைதான பட்டியல்

 


1956இல் ராமன் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
1960இல் தேசப்படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
1974இல் இராவணலீலா போராட்டத்தில் கைதானார்.
31. சனவரி 1976 முதல் 23. சனவரி 1977 வரை மிசா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
31. அக்டோபர் 1977 இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்.
நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தான கவி கண்ணதாசனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியதற்கு 22. மார்ச் 1979 முதல் 4. ஏப்ரல் 1979 வரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1981இல் மனுதர்ம சாத்திரத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
16.03.1982இல் இஸ்மாயில், சோமசுந்தரம் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி கோட்டை முன் மறியல் செய்து கைதானார்.
23.01.1983இல் ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.
09.08.1984இல் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆகஸ்டு 15 அய் (1984) துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக்கொடி ஏற்றியதற்கு கைது செய்யப்பட்டார்.
ஈழத்தில் ராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு 07.09.1984இல் சென்னையில் கருப்புக் கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
13.12.1984இல் தமிழக மீனவர்களை சிங்களக்கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல் செய்து கைதானார்.
22.09.1985இல் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்துப்போராட்டம் நடத்தியதற்கு கைது செய்யப்பட்டார்.
காவிரி நீருக்காக திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்து 30. அக்டோபர் 1985 முதல் 5. நவம்பர் 1985 வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய கல்வித்திட்ட நகல் எரித்ததற்கு 22. சூன் 1986 முதல் 4. சூலை 1986 வரை சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
7. அக்டோபர் 1986 இல் டில்லியில் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
20.02.1987இல் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக கப்பல் மறியல் செய்து தூத்துக்குடியில் கைதானார்.
01.06.1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.
02.08.1987இல் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகல் எரித்து சிறை சென்றார்.
ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் செய்ததற்கு 26.10.1987முதல் 4. நவம்பர் 1987 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
25.01.1988இல் இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம் செய்து கைதானார்.
21.03.1988இல் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து மதச் சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டி சென்னை கிண்டியில் கைதானார்.
10.09.1988இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்கச் செல்கையில் கைதானார்.
08.11.1988இல் தீண்டாமை, சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவி எரித்ததற்கு கைது செய்யப்பட்டார்.
1. ஆகத்து 1989 இல் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி தமிழகம் எங்கும் அஞ்சலகங்கள் முன் மறியல் செய்ததால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
10.10.1990அல் மண்டல் குழுப் பரிந்துரையை தடை செய்த உச்சநீதிமன்ற ஆணையை எரித்து கைதானார்.
09.11.1991இல் காவிரி நீர் மண்டல் குழு பிரச்சினைகளுக்காக தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.
20.01.1992அல் கர்நாடகத் தமிழருக்காக சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் மறியல் செய்து கைதானார்.
30.04.1992இல் காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக் கோரி திருவாரூர் அஞ்சலகம் முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
06.12.1992இல் தடையை மீறி இராவணலீலா விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தி புதுவையில் கைதானார்.
10.02.1993இல் சென்னை இரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
23.04.1993இல் சென்னையில் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி மறியல் போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.
01.09.1993இல் 69 சதவீதத்தை முடக்கும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்தற்காக கைது செய்யப்பட்டார்.
02.12.1994இல் இந்தி திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.
31.08.1995இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் 25.09.1995இல் தமிழகத்தில் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற ஆணையை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
23.08.1996இல் சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவியை எரித்ததற்கு 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
29.12.2000இல் அமைனத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகம் முன்பு மறியல் செய்து தஞ்சையில் கைதானார்.
09.12.2004இல் சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் செய்ய முயன்றபோது கைதானார்.
சென்னையில் 1. பெப்ரவரி 2006 அன்று அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமை கோரி மறியல் செய்து கைதானார்.
01.11.2006இல் தமிழ்நாடு அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அவமதித்ததற்கு நீதிபதி முகோபாத்யாயா மன்னிப்பு கேட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன் மறியல் செய்து கைதானார்.
23.09.2008இல் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ரயில் மறியல் செய்து கைதானார்.
29.12.2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.
02.09.2009இல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக ரயில் மறியல் செய்து கைதானார்.
05.06.2010இல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட கோரி சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி 46 ஆவது முறையாக சிறை சென்றார்.
15. அக்டோபர் 2012 அன்று நெய்வேலியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்க கூடாது என்று நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி தமிழர் தலைவர் 47வது முறையாக கைதானார்.

5.3.13: டெசோ சார்பில் இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் கி.வீரமணி 48-ஆவது முறையாக கைது செய்யப் பட்டார்.

12.3.13: ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக டெசோ சார்பில் தமிழகம், புதுவையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று சென்னை அண்ணாசாலையில் நடந்த மறியலில் ஈடுபட்டு தமிழர் தலைவர் கி.வீரமணி கைது செய்யப்பட்டார்.

50. 18-04-2016 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைக் கோரி மறியல் போராட்டத்தில் 50 ஆவது முறையாக கைதானார்.

51. 25-04-2017 தமிழக உரிமைகளை காத்திட, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் முழுஅடைப்புப் போராட்டத்தில் 51 ஆவது முறையாக கைதானார்.


53. ஏழு தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகைப் போராட்டம்: 53 ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது


கடந்த 28ஆண்டுகளாக சிறை யில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை வேளச்சேரி சாலை சைதாப்பேட்டை பகுதியில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 3.12.2018 காலையில் தொடங்கி நடைபெற்றது. ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத் திற்குக் கொண்டு சென்றனர்.

54. மனுதர்ம நூலை எரித்து 54ஆம் முறையாக கைது

-  விடுதலை நாளேடு, 7.2.19

07.02.19 முற் பகல் சென்னை மணியம்மையார் சிலை எதிரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவர்கள் மனுதர்ம நூலை எரித்தார். தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் 54ஆம் முறையாக கைது செய்யப்பட்டார். அனைவரும் சென்னை புரசைவாக்கம் அழகப்பா பள்ளி அருகில் உள்ள கம்மாவர் மண்டபத்தில் அடைக்கப் பட்டனர்.



Monday, 13 September 2021

இந்து இந்து மதம் பெயர் பொருத்தமா?

1. "இந்து மதம் என்பது சரியில்லாத பெயர்"
- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி 
"Hinduism is a later, incorrect appellation"
- Indian express dated December 8 1981, page 5

2. "இந்து என்னும் பதத்தை (மதத்திற்கு) வழங்க எனக்கு இஷ்டமில்லை"
- சுவாமி விவேகானந்தர், நூல்: ஸ்ரீ விவேகானந்த விஜயம், மகேஷ் குமார் சர்மா, பக்கம் 26

3. "இந்து என்ற சொல் ஒரு முறையான சமயக் கோட்பாடு அல்லது கடவுள் பற்றின ஒருமைப்பட்ட அமைப்பு என எவரையும் நினைக்க வைக்கலாம் எனினும் இந்து என்பது ஒரு மதம் அன்று"
-சுவாமி தர்ம தீர்த்தா
"The word Hindu might lead one to think that the unity is one creed of faith. Hinduism is not a religion"
book: The menace of Hindu imperialism, page 194

4. "இந்து மதம் என்பது ஒரு அண்மைக்கால புதிய பெயர்" - சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி
"Hinduism is a modern word":  Hinduism-Doctrine and way of Life, page 15

5. "இந்து மதம் என்பது யாது?
- இந்து எனும் சொல் நமது பழமையான இலக்கியங்களில் காணப் பெறவில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது. ஒழுங்கான உருவமைப்பு பெறாதது. பல்வகை தோற்றக்கூறுகள் உடையது. எல்லா மக்களுக்கும் எல்லா செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது வழக்கிலுள்ள கருத்தின்படி ஒரு மதமா இல்லையா என மெய்யாகவே உறுதிமொழி இயலும் செயலன்று" - ஜவகர்லால் நேரு
"What is Hinduism? 
The word Hindu does not occur at all in our ancient literature. Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. it is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word" 
Jawaharlal Nehru
Book: Discovery of India, page 108

6. "வடமொழி அகரமுதலி களிலும் இக் காலம் வரையிலான வடமொழி இலக்கியம் அனைத்திலும் ஹிந்து, ஹிந்த், இந்துஸ்தான், என்ற சொல் எதுவும் கிடையாது
- "மகாமகோபாத்தியாய பண்டித ராஜ்"  ஷியாம்குமார் ஆச்சார்யா
"There is no such word as Hindu, hind, Hindustan in any of our Sanskrit dictionaries and the entire Sanskrit literature up to date.
Book: Danger to Bharat - Freedom, page 84

7. "இந்து என்ற சொல் எந்த காலத்தில் வந்தது என்ற ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை என்றாலும் அது பிற்காலத்தில் வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்துக்கள் ஆயினர். 
- கவிஞர் கண்ணதாசன் 
நூல்: அர்த்தமுள்ள இந்து மதம், பகுதி 2, பக்கம் 50

8. "இந்து யார் என்று தெரியவில்லை. இந்து மதத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது கவலையும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது இது புராதன காலமாக நம் நாட்டில் கைக்கொள்ளப்பட்டு வரும் கொள்கையா அல்லது ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டு இருப்பது தான் இந்து மதமா? எது இந்துமதம்? ஒன்றுமே புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே புரியவில்லை. இந்து என்ற பதம் நம் நாட்டை சேர்ந்த தில்லை"
பேசியவர்: TSS இராஜன் 
இந்து மதாபிமான சங்க விழா
காரைக்குடி
12.10.1934

9. "இந்து மதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. இந்து என்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும்" 
- பேசியவர்: வீ. பாஷ்யம் ஐயங்கார்,
ஆரியர் மாநாடு,
மணி ஐயர் மண்டபம், திருவல்லிக்கேணி
ஆதாரம் : "Madras Mail" dated 10.12.1940

Arul Narayana
மோகன் ராஜா முகநூல் பதிவு,5.11.19 (திராவிட ஆய்வு முகநூல் குழு)