Thursday, 11 January 2018

நாட்டைக் கொள்ளை அடிப்பவர்கள் பார்ப்பன, பனியாக்களே!




நாடுமுழுவதும் பார்ப்பன, பனியாக்கள் ஊழல் முறைகேடுகளை செய்து வருகிறார்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. நாட்டையே கொள்ளையடித்தவர்கள் பார்ப்பன, பனியாக்கள் என்றாலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களாக உள்ள லாலு பிரசாத், மாயாவதி போன்றவர்களை இழிவுபடுத்தி வந்துள்ளனர்.

பார்ப்பன, பனியாக்களை விட தாழ்த்தப்பட்ட ஜாதியி னராகக் கூறப்படுகின்றவர்களில்  எவராவது ஒருவர் பார்ப்பனீயத்துக்கும், ஆர்.எஸ்.எஸ்-. சங் பரிவாரத்தின ருக்கும் எதிராக குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள்மீது ஊழல் முறைகேடுகள் குற்றம் சுமத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அல்லது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திலிருந்து பார்ப்பனீயத்துக்கு எதிராக பேசுவோரை விலைக்கு வாங்கி, அவர்களின் வாயை அடைக்கப் பார்ப்பார்கள்.

2014ஆம் ஆண்டு வரை எந்த வகுப்பினர் அதிக அளவில் கொள்ளை அடித்துள்ளனர் என்பதைக் கீழ் காணும் பட்டியல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

பார்ப்பனர்களின் ஊழல் பட்டியல்

(அமெரிக்க டாலர் மதிப்பில்)

பாசில் இன்டர்நேஷனல்                 -530 மில்லியன்

சகாரா ஊழல்                                             -9 பில்லியன்

சாரதா ஊழல்                                             -6 பில்லியன்

காமன் வெல்த்

விளையாட்டு ஊழல்                                          - 12 பில்லியன்

டிடிசிஏ ஊழல்                                            - 14 மில்லியன்

பிக்சியான் மீடியா                                  - 100 மில்லியன்

சூர்யா ஃபார்மா                                          - 100 மில்லியன்

எலெக்ட்ரோதெர்ம் இந்தியா

லிமிடெட்                                      - 332 மில்லியன்

விஜய் மல்லையா                                                - 1.3பில்லியன்

வின்சம் டயமண்ட்                                              - 400 மில்லியன்

சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ்           - 210 மில்லியன்

நிலக்கரி ஊழல்                                       - 40 பில்லியன்

அய்ஜிஅய்ஏர்போர்ட்                                           - 32 பில்லியன்

டிஅய்ஏஎல் ஊழல்                                 - 25 பில்லியன்

கிரானைட் ஊழல்                                  - 2.8 பில்லியன்

மகாராட்டிரா நீர்ப்பாசன ஊழல் - 12 பில்லியன்

கருநாடகா வக்பு வாரிய நில ஊழல்     - 39 பில்லியன்

மத்திய சுங்க வரி ஊழல்                 - 3.82 பில்லியன்

நெடுஞ்சாலை ஊழல்                                        - 13.97 மில்லியன்

கிஃப்ட் ஊழல்                                             - 1,00,000

ஃபிளையிங் கிளப் முறைகேடு                 - 38 மில்லியன்

அரவிந்த் ஜோஷி மற்றும்

தினு ஜோஷி                                              - 50 மில்லியன்

முழுமையான பிரெஞ்ச் போர்

ஜெட் விமானம்                                       - 11 பில்லியன்

கோவா கனிம ஊழல்                                         - 700 மில்லியன்

காஷ்யப் இபிஎப்ஓ ஊழல்                               - 118 மில்லியன்

அய்எஸ்ஆர்ஓ தேவாஸ்                 - 300 மில்லியன்

வாக்களிக்கப்பணம்                                             - 7,15,000

2ஜி அலைக்கற்றை                                              - 6.9 பில்லியன்

காமன் வெல்த் விளையாட்டு    - 15.5 பில்லியன்

எல்அய்சி ஹவுசிங் கடன்                              - 200 மில்லியன்

பெலகேரி துறைமுகம்                                     - 12 பில்லியன்

யுஅய்டிஏஅய்                                             - 1 பில்லியன்

ஸ்கார்பின் டீல்                                        - 10 மில்லியன்

பராக் ஏவுகணை                                      - 200 மில்லியன்

காப்ளர் ஊழல்                                           - 214 மில்லியன்

சுக்ராம் ஊழல்                                           - 5 மில்லியன்

ஊறுகாய் ஊழல்                                     - 20,000

இந்தியன் வங்கி                                      - 260 மில்லியன்

போபார்ஸ்                                    - 400 மில்லியன்

எச்டிடபிள்யூ கமிஷன்                                       - 4 மில்லியன்

அரிதாஸ் முந்த்ரா ஊழல்                               - 10 மில்லியன்

தேஜா கடன்கள் ஊழல்                                     - 5 மில்லியன்

பிஎச்யு                                              - 1,00,000

ஜீப் ஊழல்                                     - 1,60,000

பனியாக்களின் ஊழல் பட்டியல்

(அமெரிக்க டாலர் மதிப்பில்)

முர்லி இண்டஸ்ட்ரீஸ்                                    - 135 மில்லியன்

கெம்ராக் இண்டஸ்ட்ரீஸ்                              - 140 மில்லியன்

வருண் இண்டஸ்ட்ரீஸ்                                  - 183 மில்லியன்

சூம் டெவலப்பர்ஸ்                                               - 275 மில்லியன்

ஃபார் எவர் பிரீசியஸ் ஜூவல்லரி          - 200 மில்லியன்

கார்ப்பரேட் இஸ்பாட் அல்லாய்ஸ்        - 205 மில்லியன்

வோடாஃபோன் ஊழல் முறைகேடு     - 1.9 பில்லியன்

கைனடிக் பைனான்ஸ் ஊழல்    - 34 மில்லியன்

அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட் ஊழல் - 5 மில்லியன்

குஜராத் பொதுத்துறை நிறுவன(பி.எஸ்.யு.)

ஊழல்                                               - 3.39 பில்லியன்

பருப்பு ஊழல்                                             - 2,00,000

அய்.பி.எல். கிரிக்கெட் ஊழல்      - 8 பில்லியன்

கேதன் பாரிக்                                              - 200 மில்லியன்

கல்கத்தா பங்கு சந்தை                                     - 2 மில்லியன்

ஹர்ஷத் மேத்தா                                   - 800 மில்லியன்

நகர்வாலா                                    - 1 மில்லியன்

குவாவோ எண்ணெய் ஊழல்      - 4,40,000

முன்னேறிய ஜாதியினரின்

ஊழல் பட்டியல்

(அமெரிக்க டாலர் மதிப்பில்)

டெக்கான் கிரானிக்கிள்                                     - 100 மில்லியன்

ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ்                                     - 150 மில்லியன்

ஜெகன்மோகன் ரெட்டி                                      - 15 பில்லியன்

ஆந்திரப்பிரதேச நில ஊழல்        - 20 பில்லியன்

மகாராட்டிரா முத்திரைவரி ஊழல்        - 126 மில்லியன்

பஞ்சாப் நெல் ஊழல்                                           - 3.59 மில்லியன்

பெல்லாரி கனிம ஊழல்                                  - 3.2 மில்லியன்

ஆதார்ஷ் வீடுகள் ஊழல் லாவசா           - 80 மில்லியன்

ஏபிஅய்அய்அய்சி                                  - 2 பில்லியன்

வசுந்தராராஜே நில ஊழல்                            - 4.4 பில்லியன்

சத்யம்                                              - 1 பில்லியன்

நட்வர் சிங்                                    - 10 பில்லியன்

அத்வானி ஹவாலா                                           - 18 மில்லியன்

பார்ப்பனர்கள், பனியாக்கள் மற்றும் பிற உயர்ஜாதியினரின் 2014ஆம் ஆண்டு வரையிலான ஊழல்கள் இயன்றவரை இங்கே பட்டியலிடப்பட்டன.

Velivara.cm (9.7.2017)

- விடுதலை ஞாயிறு மலர், 11.11.17

Thursday, 4 January 2018

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்பதற்கு வெவ்வேறு பொருள்கள்இருந்து விட்டுப் போகட்டும்; ஒரு இரகசியம்இப்பொழுது வெளி உலகத்திற்குத் தெரிந்து விட்டது.

அதுதான் சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதப்பார்ப்பனர்கள் அடித்து வந்த கொள்ளை எப்படிப்பட்டதுஎன்பது.

கோயில் வருமானம் போதுமானதல்ல; உண்டியல்வசூல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லைஎன்றெல்லாம் அவர்கள் புலம்பினார்களேநினைவிருக்கிறதா?

நீதிமன்றத்திலேயே   என்ன கூறினார்கள்? கோயில்ஆண்டு வருமானமே ரூ.37,199 மட்டுமே என்றனர்(பாட்டா செருப்பு விலை போல இருக்கிறதல்லவா!)

மலை விழுங்கி மகாதேவன்களாயிற்றே! பொய்பேசுவதுபற்றிக்  கொஞ்சம்கூட வெட்கப்படாதவர்கள்ஆயிற்றே!

அக்கோயில் இந்து அறநிலையத் துறையின் நேரடிப்பார்வையின் கீழ் வந்ததற்குப் பிறகு அறநிலையத்துறையின் சார்பில் முதன் முதலாக இவ்வாண்டுபிப்ரவரி 5ஆம் தேதி உண்டியல் வைக்கப்பட்டது.இதுவரை நான்கு முறை உண்டில் பணம்எண்ணப்பட்டது. எண்ணியவர்கள் இந்தியன் ஓவர் சீஸ்வங்கி ஊழியர்கள். இந்த ஒன்பது மாதங்களில் மட்டும்உண்டியல் வருமானம் என்ன தெரியுமா? ரூ.8,51,996ஆகும்.

ஆனால் தீட்சதர்கள் ஆண்டு ஒன்றுக்கு வருமானம்என்று சொன்ன தொகை எவ்வளவு? வெறும் ரூ.37,199.

தீட்சதர்களின் நாணயமற்ற தன்மைக்கும்,பித்தலாட்டத்திற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டுதேவை?

எத்தனை நூறு ஆண்டு காலமாக இந்தக் கொள்ளைநடந்திருக்கிறது? அதற்கெல்லாம் யார் பொறுப்பு?இதன்மீது, தீட்சதப் பார்ப்பனர்கள்மீது கிரிமினல்நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா?

இவ்வளவுக்கும் இவர்கள் யாராம்?கைலாயத்திலிருந்து சாட்சாத் நடராஜ பெருமானேஇவர்களை சிதம்பரத்திற்கு அழைத்து வந்தாராம்!

இதில் கடவுள் நடராசனின் பித்தலாட்டக் கூட்டணியும்சேர்ந்து கொண்டது போலும்!

15.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

17th July 2017 முன்பு வரலாற்று தகவல்கள் ஆல் இடுகையிடப்பட்டது


Wednesday, 3 January 2018

திராவிடர் இயக்க சாதனை இன்றைய நிலை

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,*

அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,,,