சிதம்பர ரகசியம் என்பதற்கு வெவ்வேறு பொருள்கள்இருந்து விட்டுப் போகட்டும்; ஒரு இரகசியம்இப்பொழுது வெளி உலகத்திற்குத் தெரிந்து விட்டது.
அதுதான் சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதப்பார்ப்பனர்கள் அடித்து வந்த கொள்ளை எப்படிப்பட்டதுஎன்பது.
கோயில் வருமானம் போதுமானதல்ல; உண்டியல்வசூல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லைஎன்றெல்லாம் அவர்கள் புலம்பினார்களேநினைவிருக்கிறதா?
நீதிமன்றத்திலேயே என்ன கூறினார்கள்? கோயில்ஆண்டு வருமானமே ரூ.37,199 மட்டுமே என்றனர்(பாட்டா செருப்பு விலை போல இருக்கிறதல்லவா!)
மலை விழுங்கி மகாதேவன்களாயிற்றே! பொய்பேசுவதுபற்றிக் கொஞ்சம்கூட வெட்கப்படாதவர்கள்ஆயிற்றே!
அக்கோயில் இந்து அறநிலையத் துறையின் நேரடிப்பார்வையின் கீழ் வந்ததற்குப் பிறகு அறநிலையத்துறையின் சார்பில் முதன் முதலாக இவ்வாண்டுபிப்ரவரி 5ஆம் தேதி உண்டியல் வைக்கப்பட்டது.இதுவரை நான்கு முறை உண்டில் பணம்எண்ணப்பட்டது. எண்ணியவர்கள் இந்தியன் ஓவர் சீஸ்வங்கி ஊழியர்கள். இந்த ஒன்பது மாதங்களில் மட்டும்உண்டியல் வருமானம் என்ன தெரியுமா? ரூ.8,51,996ஆகும்.
ஆனால் தீட்சதர்கள் ஆண்டு ஒன்றுக்கு வருமானம்என்று சொன்ன தொகை எவ்வளவு? வெறும் ரூ.37,199.
தீட்சதர்களின் நாணயமற்ற தன்மைக்கும்,பித்தலாட்டத்திற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டுதேவை?
எத்தனை நூறு ஆண்டு காலமாக இந்தக் கொள்ளைநடந்திருக்கிறது? அதற்கெல்லாம் யார் பொறுப்பு?இதன்மீது, தீட்சதப் பார்ப்பனர்கள்மீது கிரிமினல்நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா?
இவ்வளவுக்கும் இவர்கள் யாராம்?கைலாயத்திலிருந்து சாட்சாத் நடராஜ பெருமானேஇவர்களை சிதம்பரத்திற்கு அழைத்து வந்தாராம்!
இதில் கடவுள் நடராசனின் பித்தலாட்டக் கூட்டணியும்சேர்ந்து கொண்டது போலும்!
15.11.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
17th July 2017 முன்பு வரலாற்று தகவல்கள் ஆல் இடுகையிடப்பட்டது
No comments:
Post a Comment