Sunday, 10 November 2024

பார்ப்பனர் ஆதிக்கம் பாரீர்! (அரசு பதவிகள்)

 


விடுதலைஞாயிறு மலர்

கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாள்கள் உலகளாவிய பார்ப்பனர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

கேரள பார்ப்பன சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது “அய்அய்டியில் படித்து. அதன்படி கிடைத்து வரும் தற்போதைய வேலைகளில் மட்டும் திருப்தி கொள்ளாமல், அய்.ஏ.எஸ், போன்ற சிவில் சர்வீசஸ் துறைகளுக்குப் பார்ப்பனர் சமுதாய இளம் தலைமுறையினர் அதிகளவில் வரவேண்டும். கேரளாவில் நாம் ஒற்றுமையாக இருந்தால், தேர்தலில், 60 தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக இருக்க முடியும். அனைத்துக் கட்சியினரிடமும் ஒரே மாதிரியான அணுகு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
பார்ப்பனர் சங்கமத்தை முன்னிட்டு கண்காட்சியை, ‘தினமலர்’ நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இலஆதி மூலம் துவக்கி வைத்தார். (தெரிந்து கொள்வீர் தினமலரை)
அய்அய்டியில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர் என்பது அவர்கள் வாயாலேயே தெரிந்து விட்டதே!
உண்மையைச் சொல்லப்போனால் பார்ப்பனர்கள் சகலத் துறையிலும் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதோ சில புள்ளி விவரங்கள்:
1. குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்தப் பதவிகள்: 49
பார்ப்பனர்கள்:39, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 4; பிற்படுத்தப்பட்டோர்: 6
2. குடியரசு துணைத் தலைவர் செயலகத்தின் பதவிகள்: 7
பார்ப்பனர்கள்:7; பிற்படுத்தப்பட்டோர்: 0
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 0.
3. கேபினட் செயலாளர் பதவிகள்: 20:
பார்ப்பனர்கள்:17; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 1 பிற்படுத்தப்பட்டோர்: 2
4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தப் பதவிகள்: 35
பார்ப்பனர்கள்: 31 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 2 பிற்படுத்தப்பட்டோர்: 2
5. விவசாய அமைச்சரகத்தில் மொத்தப் பதவிகள்: 274
பார்ப்பனர்கள்: 259, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 5; பிற்படுத்தப்பட்டோர்: 10
6. பாதுகாப்பு அமைச்சகம்: மொத்தப் பதவிகள்: 1579
பார்ப்பனர்கள்: 1300, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 48; பிற்படுத்தப்பட்டோர்: 31
7. சமூக நல மற்றும் சுகாதார அமைச்சகம் மொத்தப் பதவிகள்: 208
பார்ப்பனர்கள்: 132; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 17; பிற்படுத்தப்பட்டோர்: 60
8. நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்: 1008
பார்ப்பனர்கள்-942 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 20; பிற்படுத்தப்பட்டோர்: 46
9. பொருளாதரம் மற்றும் வணிகவியல் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்: 409
பார்ப்பனர்கள்: 327; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 19, பிற்படுத்தப்பட்டோர்: 63
10. தொழில் அமைச்சகத்தின் மொத்த பதவிகள்: 74
பார்ப்பனர்கள்: 59, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 4; பிற்படுத்தப்பட்டோர்: 9.
11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள்: 121
பார்ப்பனர்கள்: 91, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 9 பிற்படுத்தப்பட்டோர் 21
12. ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் ஒட்டு மொத்தம்: 27
பார்ப்பனர்கள்: 25; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 0; பிற்படுத்தப்பட்டோர்: 2
13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர்: 140
பார்ப்பனர்கள்: 140, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 0. பிற்படுத்தப்பட்டோர்: 0.
14. ஒன்றிய அரசு பல்கலைக் கழகத் துணைவேந்தர்: 116
பார்ப்பனர்கள்: 108; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 3; பிற்படுத்தப்பட்டோர்: 5
15. ஒன்றிய பொதுச் செயலாளர் பதவிகள்: 26
பார்ப்பனர்கள்: 18; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 1 பிற்படுத்தப்பட்டோர்: 7
16. உயர்நீதிமன்ற நீதிபதி: 330
பார்ப்பனர்கள்: 306, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 4; பிற்படுத்தப்பட்டோர்: 20
17. உச்சநீதிமன்ற நீதிபதி: 26
பார்ப்பனர்கள்: 23; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 1 பிற்படுத்தப்பட்டோர்: 2
18. அய் ஏ. எஸ் அதிகாரிகள்: 3600
பார்ப்பனர்கள்: 2750, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்: 300, பிற்படுத்தப்பட்டோர்: 350
டில்லியை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனத்தினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள்தான் இவை.
நூற்றுக்கு 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் பல மடங்கு எண்ணிக்கையில் தின்று கொழுத்து வயிற்றில் சந்தனம் தடவிக்கொண்டு அஜீரணக்கோளாறால் படுத்து உருளும் கூட்டம்: இதுவும் போதாது: நூற்றுக்கு நூறு பதவிகளையும் தாங்களே அனுபவித்துத் தீர வேண்டும், சுளையாக விழுங்க வேண்டும் என்று மாநாடு கூட்டுகிறார்கள்: சலங்கை கட்டி ஆடுகிறார்கள் என்றால், பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் விழித்துக் கொள்ளவேண்டாமா? வெகுண்டெழுந்து போராட வேண்டாமா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!

“விடுதலை” (அக்டோபர்3, 2023)

No comments:

Post a Comment