Friday, 5 April 2024

மீண்டும் மையில் கற்களில் தமிழும் ஆங்கிலமும் நீக்கப்பட்டு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

2004ல் முதல் முறையாக தமிழ்நாட்டு மையில் கற்களில்    தமிழும் ஆங்கிலமும் நீக்கப்பட்டு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டது.இதை கண்டித்து 27.10.04ல் படத்துடன் விடுதலை நாளேட்டில் எழுதினேன்.
27.11.04ல் தஞ்சையில நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் இந்த இந்தித் திணிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாடு சட்டசபையிலும் நடுவண் அரசின் அவையிலும் விடுதலை நாளேட்டை காண்பித்து வாதிடப்படடது. அன்றைய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
21.12.04ல் இந்தி திணிப்பை நீக்க அன்றைய தமிழ்நாடு முதவ்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நடுவண் அரசுக்கு கடிதம் அனுப்பினார். 24.12.04ல் அன்றைய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் தமிழ் இடம்பெற நடவடிக்கை எடுத்தார்.
மீண்டும் பழையபடி பாஜக ஆட்சியில் இந்தி மட்டுமே என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

04.04.2017 எனது முகநூல் பதிவு

No comments:

Post a Comment