Tuesday 28 February 2023

ஒப்புதல் வாக்குமூலம் ராமர் சேது பாலம் பற்றிய உறுதியான ஆதாரம் இல்லை!

 

மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அறிவிப்பு!

புதுடில்லி, டிச. 24- இந்தியா விற்கும் இலங்கைக்கும் இடையே பழங்கால ராமர்சேது பாலம் இருந் ததாகக் கருதப்படும் பிராந்தியத்தின் செயற் கைக்கோள் படங்கள், தீவுகள் மற்றும் சுண் ணாம்புக் கற்களைக் கைப்பற்றியுள்ளன. ஆனால், அவை ஒரு பாலத் தின் எச்சங்கள் என்று "துல்லியமாகச் சொல்ல முடியாது" என்று ஒன்றிய அரசு வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

"ஓரளவிற்கு, விண் வெளி தொழில்நுட்பத் தின் மூலம் துண்டுகள் மற்றும் தீவுகள், சில வகையான சுண்ணாம்புக் கற்கள் ஆகியவற்றைக் கண் டறிய முடிந்தது. அவை எச்சங்கள் அல்லது பாலத் தின் பாகங்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது" என்றுஒன்றிய விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. உறுப்பினர் கார்த்திகேய சர்மா "இந்தி யாவின் கடந்த காலத்தை அறிவியல்பூர்வமாக மதிப்பீடு செய்ய அரசாங் கம் ஏதேனும் முயற்சி களை மேற்கொள்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து ஒன்றிய அமைச்சர் "விண் வெளித் துறை உண்மை யில் இதில் ஈடுபட்டுள் ளது என்பதை அவருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராமர் சேது பாலம் தொடர்பாக அவர் இங்கு கேட்ட கேள்வி யைப் பொறுத்தவரை, வரலாறு 18,000 ஆண்டு களுக்கும் மேலானது என் பதாலும், வரலாற்றைப் பார்த்தால், அந்த பாலம் சுமார் 56 கி.மீ. நீளம் கொண் டது என்பதாலும் கண்டு பிடிப்பதில் எங்களுக்கு சில வரம்புகள் உள்ளன.

செயற்கைக்கோள் படங்களின் மூலம் கைப் பற்றபட்ட தீவுகள் "ஒரு குறிப்பிட்ட அளவிலான தொடர்ச்சியைக் காட்டு கின்றன. இதன் மூலம் சில அனுமானங்களை வரைய முடியும்."

எனவே, நான் சுருக்க மாகச் சொல்ல விரும்பு வது என்னவென்றால், உண்மையில் அங்கு இருந்த சரியான கட்ட மைப்பைக் குறிப்பிடுவது கடினம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசாங் கம், தீவுகளின் சங்கிலி வழியாக ஒரு வழித் தடத்தை அனுமதிக்கும் வகையில், 83 கி.மீ. தூரம் தோண்டி, சேது சமுத்தி ரத் திட்டத்திற்கான மாற்று சீரமைப்பை ஆய்வு செய்ய, சுற்றுச்சூ£ல் ஆர்வலர் ஆர்.கே.பச்சவுரியின் கீழ் ஒரு குழுவை அமைத்தது.

சீதையை மீட்பதற்காக இலங்ககைக்கு வருவதற்கு ராமர்  ஒரு பாதையை உருவாக்கினார் என்றும் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மக் கள் நம்பிக்கையை கார ணம் காட்டி பா.ஜ.க. இந்த திட்டத்தை எதிர்க்கிறது.

No comments:

Post a Comment