• Viduthalai
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்ட 'துக்ளக் வார' ஏட்டின் 52 ஆவது ஆண்டு விழாவில் (8.5.2022) 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்ற பெயரில் 'மனோன்மணியம் சுந்தரனார்' அவர்கள் இயற்றிய 'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடலை பாடி இருப்பது தமிழ்நாடு அரசின் ஆணைக்கு எதிரானதாகும்.
'மனோன்மணியம் சுந்தரனார்' அவர்கள் இயற்றிய 'தமிழ்த் தெய்வ வணக்கம்' பாடலில் இருந்து தெரிந் தெடுக்கப்பட்ட வரிகளே 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்ற பெயரில் தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்ட மாநில பாடல் ஆகும்.
தமிழ்நாடு அரசு எதை அறிவித்ததோ அதை தான் பாட வேண்டும்; அதற்கு மாறாக பாடுவது சட்டப்படி குற்றமாகும். தமிழ்நாடு அரசு இதுகுறித்து தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
-செ.ர.பார்த்தசாரதி, சென்னை
No comments:
Post a Comment