பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களைக் குறிக்க 'சூத்திரன்' என்ற சொல் அரசுக் குறிப்புக்களிலும் பயன்படுத்தப் பட்டு வந்ததை நீக்குவதற்குப் பெரியார் அரும்பாடு பட்டார்.
1926 வரை நடைபெற்ற நீதிக் கட்சி ஆட்சியில் அச்சொல் அரசுக் குறிப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. 1926இல் நீதிக் கட்சி தோற்றவுடன் பார்ப்பனர் ஆதிக்கம் மீண்டும் தலையெடுத்ததன் பயனாய் மீண்டும் அச்சொல் அரசுக் குறிப்புகளில் பயன் படுத்தப்பட்டது. (வி. 19.7.80) சென்னை மாகாண முதன்மந்திரி - சட்டசபையில் காட்டிய ஒரு ஆதாரத்தில் சூத்திரன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பெரியார் குடியரசில் வன்மையாகக் கண்டித்து எழுதினார்.
சூத்திரன் என்ற சொல் எவ்வளவு கேவலமான பொருளுடையது என்பதை வேதத்திலிருந்தும் மனுதர்மத்திலிருந்தும் சான்று காட்டி விளக்கினார்.
சூத்திரன் என்றால் பக்தியினால் பார்ப்பானுக்கு வேலை செய்கிறவன், யுத்தத்தில் தோற்று அடிமை யானவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், பரம்பரை யாய்ப் பார்ப்பானுக்குத் தொண்டு செய்பவன். மனு 8-415
இவர்தாம் பெரியார் (பக்.26)
- விடுதலை ஞாயிறு மலர், 14. 9 .19
No comments:
Post a Comment