லக்னோ மே 3 உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 10 ஆவது மற்றும் 12 ஆவது வகுப்புகளுக்கான அரசுப் பள்ளி இறுதித் தேர்வுகள் நடை பெற்றன.
இந்தத்தேர்வுகளின்முடி வுகள் கடந்த 29.4.2018- அன்று வெளியானது. அதில், மாநிலத் தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சிப் பெறாத அவலம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த 150 பள்ளிகளில், 98 பள்ளிகளில் எந்த மாணவரும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்றும், மேலும் 52 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது என்றும் அம்மாநில கல்வித்துறை தெரி வித்துள்ளது. உ.பி.யின் காஷிப்பூர் மாவட் டத்தில்தான் அதிக அளவிலான பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், ஆக்ரா மாவட்டத்தில் 9 பள்ளி களிலும் பூஜ்ய சதவிகித அள விலான தேர்ச்சி என்றும் கூறப் பட்டுள்ளது. மேலும்காஷிப்பூர்,மிர்சா பூர்,அலிகார்ஆகியமாவட் டங்களில் தேர்ச்சி சதவிகிதம் மோசமான நிலையில் இருக் கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகள் மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளும் இதில் அடக்கம். மேலும் 237 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 20 சதவிகிதம் என்றும்கூறப்படுகிறது.இது குறித்துவிசாரணைநடத்தப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளர் வினோத் குமார் ராய் தெரிவித்துள்ளார். உ.பி. அரசு கல்வித்துறையில் எவ்வளவு அழகாக செயல்பட்டு வருகிறது என்பதை இந்த தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மாணவர்கள் இந்த அளவு மிகவும் மோசமான முறையில் தேர்ச்சி பெறாமல் போவது இதுவே முதல்முறை ஆகும். இது சாமியார் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு நடக்கும் இரண்டாவது பொதுத்தேர்வாகும். 2016 -- 2017 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தபோது, நான் ஆட்சி ஏற்று இரண்டு மாதம் ஆகிறது; ஆகவே, அடுத்த பொதுத் தேர்வுகளில் உ.பி. மாணவர்கள் தேர்விற்காக எனது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறிய நிலை யில், அவரது ஆட்சியிலே உத்தரப்பிரதேச வரலாற்றிலேயே மிகவும் மோசமான தோல்வியை பள்ளிக்கல்வித்துறை சந்தித் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நீட்' தேர்வு மய்யத்தை தமிழ்நாட்டில் அமைக்க முடியாதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்
தமிழ்நாட்டு மாணவர்கள் 90 ஆயிரம் பேர் தேர்வு எழுத, தமிழ்நாட்டில் மய்யங்கள் அமைக்க முடியாது என்று இன்று உச்சநீதிமன்றம் கூறி, மற்ற வெளிமாநிலங்களுக்குத்தான் தேர்வு எழுதச் செல்லவேண்டும் என்பது சமூகநீதிக்கு விரோத மான எவ்வளவு பெரிய அநீதித் தீர்ப்பு?
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர் எழுதும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வு நடைபெறும் வசதிகள் உள்ள மண்ணில், 90 ஆயிரம் பேர் எழுதும் சி.பி.எஸ்.இ. தேர்வுக்கு மய்யங்களை அமைக்க முடியாதா? பிறகு ஏன் இங்கு சி.பிஎஸ்.இ.? மற்ற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழு திட, ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் களுக்கு இயலுமா?
தொடர்ந்து தமிழ்நாட்டுக்குக் கேடு - எல்லா தரப்பிலும் இருந்து இழைக்கப்படுகிறது; இனி மாணவர்கள், பெற்றோர்கள் அமைதியாக இருக்க முடியுமா?
என்னே கொடுமை!
- விடுதலை நாளேடு, 3.5.18